ரொம்ப காலங்களுக்கு முன்னால பாலைவனத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு பெரியவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு.
அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க
அந்த பெரியவரும் அந்த மூணு மகன்களும் 17 ஒட்டகங்களை வளர்த்துக்கிட்டு வந்தாங்க
அந்த ஒட்டகங்களை வாடகைக்கு விட்டு அதுல வர்ற பணத்துல தங்களோட வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு வந்தாங்க.
சில காலங்களுக்கு அப்பறமா அந்த முதியவர் இறந்து போனாரு.
இறுதி சடங்கை சிறப்பா செஞ்ச அந்த மூணு மகன்களும் தங்களோட அப்பா ஒரு உயில் எழுதி வச்சிருக்குறத தெரிஞ்சுக்கிட்டாங்க.
அந்த உயில்ல தன்னோட 17 ஒட்டகங்களையும் தன்னோட மூணு மகன்களும் பிரிச்சிக்கிட சில குறிப்பு எழுதி வச்சிருந்தாரு
இத படிச்சுப்பாத்த அந்த மூணு மகன்களுக்கும் ஒரே குழப்பம்
ஏன்னா அந்த உயில்ல மூத்த மகனுக்கு 17 ஒட்டகத்துல இருந்து சரி பாதி ஒட்டகம் கொடுக்கணும்னும்
இரண்டாவது மகனுக்கு 17 ஒட்டகத்துல இருந்து மூணுல ஒரு பங்கு கொடுக்கணும்னும்
மூணாவது மகனுக்கு ஒன்பதுல ஒரு பங்கு ஒட்டகத்த கொடுக்கணும்னும் இருந்துச்சு
இத படிச்ச அந்த மூணு மகன்களுக்கும் ரொம்ப குழம்பி போனாங்க அது எப்படி ஒட்டகத்த அப்பா சொன்ன மாதிரி பிரிக்கிறதுனு தெரியாம கவலைப்பட்டாங்க
ரொம்ப சோர்ந்து போன அந்த மூணு மகன்களும் பக்கத்து ஊருல இருக்குற ஒரு புத்திசாலியான தெனாலி ராமன்கிட்ட போனாங்க
அவரு அந்த உயிலை படிச்சிட்டு இது ஒரு சுலபமான கணக்குனு சொன்னாரு தெனாலி ராமன்
அவரு சொன்னதை கேட்ட அந்த மூணு பேரும் அய்யா எங்களுக்கு நீங்களே அப்பா சொன்னபடி பிரிச்சி கொடுங்கன்னு சொன்னாங்க
தெனாலி ராமன் தன்னோட ஒரு ஒட்டகத்த அந்த 17 ஒட்டகங்களோட சேர்தாரு இப்ப மொத்தம் 18 ஒட்டகங்கள் இருக்குனு சொன்னாரு
உடனே அந்த மூத்த மகன கூப்பிட்டு உங்க அப்பா சொன்னமாதிரி இதுல சரிபாதி ஒட்டகமான 9 ஒட்டகங்கள எடுத்துக்க
அதுமாதிரியே அந்த மகனும் 9 ஒட்டகங்களை எடுத்துகிட்டாரு
இப்ப 9 ஒட்டகங்கள் இருக்கு உங்க அப்பா சொன்ன மாதிரி ரெண்டாவது மகனுக்கு மொத்த ஒட்டகங்கள்ல இருந்து மூணுல ஒரு பகுதி போகணும் அப்படினா 18 ஒட்டகத்துல இருந்து 6 ஒட்டகத்தை நீ எடுத்துக்கோனு சொன்னாரு
உடனே அந்த ரெண்டாவது மகன் 6 ஒட்டகங்களை தனுக்கு எடுத்துகிட்டாரு
இப்ப மீதம் 3 ஒட்டகங்கள் இருக்கு இதுல மூணாவது மகனுக்கான பங்கு ஒன்பதுல ஒரு பங்குன்னா 18 ஒட்டகத்துக்கு 2 ஒட்டகம் உன்னோடது அத அடுத்துக்கன்னு சொன்னாரு
அதேமாதிரி 2 ஒட்டகங்களை அந்த மூணாவது மகன் எடுத்துகிட்டாரு
இப்ப இருக்குறது 1 ஒட்டகம் அது என்னோட ஒட்டகம் நான் அத எடுத்துகிறேன்னு சொன்னாரு
இத பாத்த மூணு மகன்களுக்கும் ரொம்ப சொந்தோஷமா இருந்துச்சு
ஐயா உங்க புத்திசாலித்தனத்தால எங்க அப்பா கொடுத்த உயில் படி நல்ல முறையில எங்க பங்க பிரிச்சி கொடுத்தீங்கன்னு சொல்லி தெனாலி ராமனுக்கு நன்றி சொல்லிட்டு அவுங்க கிராமத்துக்கு திரும்பி போனாங்க