பாம்புகளுடன் சண்டை -ஒற்றுமையின் பாடம்-A Lesson in Unity:-ஒரு காட்ட ஒரு சிங்க ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு ,அவரு எவ்வளவுதான் நல்ல படியா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாலும் ,அந்த காட்டுல வாழ்ந்த விலங்குகள் எல்லாம் ஒன்னோட ஒன்னு சண்டைபோட்டு தனி தனியாவே வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

ஒரு ராஜாவா இந்த காட்டு விலங்குகளோட பிரச்னைய தீர்த்து வைக்குறதே சிங்கத்துக்கு பெரிய வேலையா போச்சு ,அதனால எப்படியாச்சும் காட்டு விலங்குகளுக்குள்ள நட்ப ஏற்படுத்தி விட்டுட்டோம்பா நாம நிம்மதியா அரசாங்க வேலைய பார்க்கலாம்னு யோசனை செஞ்சுச்சு சிங்கம்.

ஒரு நாள் அந்த காட்டுல இருந்த நீரோடையில ஒரு பாம்பு கூட்டம் எங்கிருந்தோ வந்து ஆக்ரமிப்பு செஞ்சுக்கிட்டதா சிங்க ராஜாவுக்கு சேதி வந்துச்சு ,இத கேட்ட சிங்க ராஜாவுக்கு கோபம் வந்திடுச்சு இது இந்த காட்டுல வாழுற எல்லா விலங்குகளுக்கும் பொதுவான நீரோடை இத எப்படி ஒரு பாம்பு கூட்டம் சொந்தம் கொண்டாடலாம்னு கோபப்பட்டு நீரோடைக்கு போச்சு

அங்க இருந்த பாம்புங்க எல்லா மத்த மிருகங்கள் தண்ணி குடிக்க முடியாதபடி பாதையில படுத்திகிட்டு எல்லாரயும் பயமுறுத்திகிட்டு இருந்தாங்க ,இத பார்த்த சிங்க ராஜா ரொம்ப கோபப்பட்டு எல்லாரும் இந்த இடத்தை விட்டு போங்க இது பொது நீரோடை எந்த ஒரு கூட்டமும் சொந்தம் கொண்டாட முடியாது ,எல்லாரும் வெளியில போங்கன்னு கத்துச்சு

இத பொருட்படுத்தாத பாம்புங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து அங்க இருந்த சிங்கத்தையே விரட்ட ஆரம்பிச்சுச்சுங்க , எல்லா பாம்பும் ஒண்ணா சேர்ந்து சிங்கத்த கடிக்க முயற்சி செஞ்சுச்சுங்க ,இது ரொம்ப ஆபத்தான விஷயம் யோசிச்சுதான் முடிவு செய்யணும் இப்போதைக்கு இங்க இருந்து போய்டுறதுதான் நல்லதுன்னு நினைச்ச சிங்கம் அங்க இருந்த திரும்பி வந்துடுச்சு

சிங்கத்தையே ஒரு பாம்பு கூட்டம் தொரத்தி அடிச்சிடுச்சுனு தெரிஞ்ச யானைகள் அங்க போயி பாம்ப எல்லாத்தையும் தொரத்திட்டா நாமதான் இந்த நீரோடைக்கு சொந்தக்காரங்களா ஆகிடலாம்னு நினைச்சிட்டு அங்க போச்சுங்க ,யானைகள் ஒவ்வொரு பாம்பா மிதிச்சு சண்ட போட ஆரம்பிச்சுச்சுங்க ஆனா ஆயிரக்கணக்குல இருந்த பாம்புங்க யானைங்க மேல எல்லாம் ஏறி பயமுறுத்துனதால யானை கூட்டமும் பின் வாங்கிடுச்சு

அடுத்ததா வந்த கழுகுகள் கூட்டமும் பாம்புகளை பிடிச்சி அதுங்கள அப்புற படுத்திட்டா இந்த காட்டுல நமக்கு நல்ல மரியாதை கிடைக்கும்னு நினைச்சுச்சு ,அதே மாதிரி பறந்து வந்து பாம்புகளை கொத்தி தூக்கிட்டு போயி வேற பக்கம் விட்டுட்டு திரும்பி வர்றதுக்குள்ள அடுத்தடுத்து வந்த பாம்பு கூட்டம் அந்த இடத்தை பிடிச்சிக்கிட்டு சண்ட போட்டுச்சுங்க

இத எல்லாத்தையும் ஒரு மரத்தடியில் நின்னு பார்த்துகிட்டு இருந்த நரி மந்திரிக்கு யோசனையாவே இருந்துச்சு ,இந்த காட்டுல இருக்குற மிருகங்கள் எல்லாம் தனி தனியா பலம் வாய்ந்தவையா இருந்தாலும் அவுங்களுக்குள்ள ஒற்றுமை இல்லாம இருக்கு அதனாலதான் ,எங்கயோ இருந்து வந்த பாம்பு கூட்டம் பொது நீரோடையை ஆக்கிரமிப்பு செஞ்சு எல்லாருக்கும் தொல்லை கொடுக்குதுனு புரிஞ்சிகிடுச்சு

உடனே சிங்க ராஜாவ சந்திச்சு எல்லா மிருகங்களையும் கூப்பிட சொல்லுச்சு ,அதே மாதிரி காட்டுக்குள்ள தண்டோரா போட்டு எல்லா மிருகங்களையும் சிங்கத்தோட குகைக்கு முன்னாடி வர வச்சது சிங்கம்

நரி என்ன சொல்ல போகுதுனு எல்லா மிருகங்களும் ஆவலோட காத்துகிட்டு இருந்துச்சுங்க ,அப்பத்தான் நரி சொல்லுச்சு உங்களுக்குள்ள ஒற்றுமை இல்ல அதனால தான் வெளி காட்டுல இருந்து வந்த பாம்பு கூட்டம் உங்கள இப்படி திணறடிக்குது
அதனால நீங்க எல்லாரும் இந்த காட்ட விட்டு போய்டுங்க ,உங்களால இந்த காட்டுக்கோ அரசருக்கோ எந்த பிரயோஜனமும் இல்லைனு சொல்லுச்சு , இத கேட்ட எல்லா மிருகங்களும் வருத்தப்பட்டுச்சுங்க ,அடடா அரசே இந்த மந்திரி சொன்ன மாதிரி எங்களுக்குள்ள ஒற்றுமை இல்லைங்கிறதா ஒத்துக்குறோம் இந்த பிரச்னையை தீர்த்து வைங்க ,நாங்க பொறந்து வளர்ந்த இந்த காட்ட விட்டு வெளியில போக எங்களுக்கு மனம் இல்லைனு சொல்லுச்சுங்க

இத கேட்ட சிங்க ராஜா ,நரியாரே எல்லா மிருகளும் நம்மளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா அந்த பாம்பு கூட்டத்தை தொரத்தி அடிச்சிரலாமான்னு கேட்டுச்சு ,அதுக்கு நரி சொல்லுச்சு கண்டிப்பா அரசேனு சொல்லிட்டு
இந்த பாம்புகளோட பலமா நீங்க எத நினைக்குறீங்கன்னு கேட்டுச்சு ,அதுக்கு கழுதை சொல்லுச்சு அந்த பாம்புகளுக்கு நிறய விஷம் இருக்கு ,அதே நேரத்துல நிறைய பாம்புகள் கூட்டமா இருக்கு ஒரு பாம்பு இல்லைனா இன்னொரு பாம்பு கடிக்க வறுது ,இத சமாளிச்சா நாம அந்த பாம்புகளை தொரத்தி விட்டுடலாம்னு சொல்லுச்சு

இத கேட்ட நரி சரி அப்ப அந்த பாம்புகளோட பலகீனம் என்னனு கேட்டுச்சு ,அப்ப குரங்கு சொல்லுச்சு இந்த பாம்புகள் முள்ளம்பன்றிய பார்த்தா சண்டைக்கு போகும் ஆனா முள்ளம்பன்றிங்களுக்கு விஷம் இல்லாததால பாம்புகளே அதிக தடவ ஜெயிச்சு இருக்குதுங்கனு சொல்லுச்சு

உடனே நரிக்கு ஒரு புது யோசனை தோணுச்சு ,அப்ப பாம்புகளோட மோதுறதுக்கு சரியான ஆள் முள்ளம்பன்றிங்கதான் ,அதுக்கு நாம எல்லாரும் சேர்ந்து பலத்த கொடுத்தம்னா இந்த பாம்புகள ஒரு கை பார்த்திடலாம்னு சொல்லுச்சு
இத கேட்ட சிங்கராஜா அது எப்படி நரியாரே முள்ளம் பன்றிக்கு நாம் உதவி வேணா செய்யலாம் ஆனா அதோட பலத்தை எப்படி கூட்டுறதுனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த நரி சொல்லுச்சு ,பாம்போட பலமான விஷத்தை நாம் செயற்க்கையா முள்ளம்பன்றிக்கு கொடுத்தம்னா நாம ஜெயிச்சிடலாம்னு சொல்லுச்சு

இத கேட்டுகிட்டு இருந்த கரடி வேகமா முன்னாடி வந்து அரசே எனக்கு ஒரு மூலிகை செடி தெரியும் அது ரொம்ப விஷத்தன்மை கொண்டது அத வச்சி முள்ளம்பன்றிகளோட ஊசி மாதிரி இருக்குற முட்டைகளுக்கு விஷத்தன்னை உண்டாக்கலாம்னு சொல்லுச்சு

உடனே எல்லா மிருகங்களும் கரடிகூட சேர்ந்து காட்டுக்குள்ள போயி நிறய விஷத்தினை உள்ள மூலிகைகல சேமிச்சு எடுத்துக்கிட்டு வந்தாங்க ,ஒரு பெரிய இடத்துல அத போட்டு யானைகளை அதுமேல நடக்க விட்டாங்க ,அதனால அந்த மூலிகைகள்ல இருந்து விச சாறு வழிய ஆரம்பிச்சுச்சு

அத எடுத்து முள்ளம்பன்றிங்க மேல பூசி விட்டுச்சு குரங்கு ,மூலிகை விஷத்தை பூசிக்கிட்ட முள்ளம்பன்றிங்கே பாம்புகள் இருக்குற இடத்துக்கு போச்சு ,நம்ம கூட சண்ட போடா புதுசா முள்ளம்பன்றி கூட்டம் வந்திருக்குனு பார்த்த பாம்புகள் கூட்டம் கூட்டமா வந்து முள்ளம் பன்றிகளை சுத்தி வளச்சுச்சுங்க ,

அப்பத்தான் முள்ளம்பன்றியோட முட்கள்ல இருந்த விஷம் பாம்புகள் மேல பட்டுச்சு ,விஷம் பட்டதும் நிறைய பாம்புகள் மயக்கம் போட்டு விழுந்துடுச்சுங்க ,என்னடா இது நாமதான் கொடிய விஷம் வுடைய ஜந்துனு நினைச்சுகிட்டு இருந்தோம் இப்ப இந்த முள்ளம்பன்றிக்கு எப்படி விஷம் வந்துச்சுனு நினைச்ச பாம்புங்க ரொம்ப பயந்து போச்சுங்க
நிறய முள்ளம்பன்றிங்க கூட்டம் கூட்டமா வர்றதும் ,மயங்கி விழுந்த பாம்புகளை யானை கூட்டம் மிதிச்சு நசுக்குறதும் ,வேகமா வந்த பெரிய பாம்புகளை கரடி கூட்டம் பிச்சி போடுறதுமா ,அந்த காடு ஒரு பெரிய பொற்காலமா மாறிடுச்சு

இதுக்கு மேல இங்க இருந்தம்னா நம்மளோட வம்சமே அழிஞ்சு போயிடும்னு நினைச்ச பாம்பு கூட்டம் அந்த இடத்த விட்டு கிளம்ப ஆரம்பிச்சிடுச்சு ,கொஞ்சம் கொஞ்சமா பாம்புகள் காட்ட விட்டு வெளியில போறத பார்த்த எல்லா மிருகங்களும் ஒண்ணா சேர்ந்து கொண்டாட ஆரம்பிச்சுச்சுங்க

அன்னைல இருந்து எல்லா மிருகங்களும் தங்களுக்குள்ள இருந்த விரோதங்கள மறந்து கூட்டா வாழ்ந்து அந்த காட்ட வளமாக்குச்சுங்க
Nice story
Super story
அருமையான குழந்தைக் கதை. ஆனால் நிறைய எழுத்துப் பிழையும் சொற்பிழையும் தொடர் பிழையும் இருக்கிறது.