“Hare and Fish: Brave Buddies to the Rescue!” முயலும் மீனும் :-ஒரு மிக பெரிய காட்டுல ஒரு முயல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த காட்டுல ஒரு மிக பெரிய குளம் இருந்துச்சு ,அந்த குளத்துக்கு பக்கத்துல இருந்த பொந்துக்குள்ளேதான் அந்த முயல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ஒருநாள் ஒரு பெரிய புழு குளத்தோரதுல இருக்குற பார்த்த முயல் அத புடிச்சி திங்க ஆசைப்பட்டு வேகமா ஓடிப்போச்சு ,அந்த நேரத்துலே முந்துனா நாள் பெஞ்ச மழையில அங்க சகதி இருந்தத முயல் கவனிக்காம போச்சு

சரியா புழுவ புடிக்க போறப்ப தடால்னு வழுக்கி குளத்துக்குள்ள விழுந்துடுச்சு , இத கொஞ்சங்கூட எதிர்பார்க்காத முயல் எவ்வளவோ முயற்சி செஞ்சும் கரை ஏற முடியல ,தொடர்ந்து நீந்திக்கிட்டே இருந்த முயல் ஒரு நேரத்துல ரொம்ப சோர்ந்து போச்சு ,அப்பத்தான் தன்னை யாராவது காப்பாத்த வரமாட்டாங்களானு சுத்தி முத்தி பார்த்துச்சு

அப்பதான் ஒரு பெரிய மீன் அத நோக்கி நீந்தி வர்றத பார்த்துச்சு , உடனே அமைதியா அந்த மீன் என்ன செய்ய போகுதுனு பார்த்துச்சு ,அந்த மீன் மெதுவா வந்து முயலோட அடிப்பகுதியில் நீந்த ஆரம்பிச்சுச்சு ,உடனே சுதாரிச்ச முயல் அந்த மீன் முதுகுல தன்னோட கால வச்சு ஒரு குதி குதிச்சுச்சு ,

அப்படி குதிச்ச முயல் கரையில வந்து விழுந்துச்சு ,மெதுவா சுயநிலைக்கு வந்த முயல் அந்த மீன் கிட்ட போயி ரொம்ப நன்றின்னு சொல்லுச்சு ,அன்னையில இருந்து அவுங்க ரெண்டுபேரும் ரொம்ப நாள் நண்பர்களா இருக்க ஆரம்பிச்சாங்க

தினமும் காலையில எழுந்ததும் மீனும் முயலும் ஒண்ணா சேர்ந்து அரட்டையடிக்கிறது தினமும் நடந்துச்சு
அப்படி இருக்குறப்பதான் ஒருநாள் அந்த காட்டுல மழை பெய்யுறது நின்னு போயி குளம் வத்த ஆரம்பிச்சது ,இத பார்த்த முயலுக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,அடடா இப்படியே மழை இல்லாம போச்சுன்னா இந்த குளம் வத்தி தண்ணியே இல்லாம போய்டும் தன்னோட நண்பனோட உயிருக்கு ஆபத்து வந்துடுமேனு பயந்துச்சு

தன்னோட உயிர காப்பாத்துன மீனோட உயிர எப்படி காப்பாத்துறதுனு யோசிச்சுச்சு ,ரொம்ப நேரம் யோசிச்சதுக்கு அப்புறமா அதுக்கு ஒரு நல்ல யோசனை வந்துச்சு உடனே தன்னோட பக்கத்து வீட்டுல வசிக்கிற குரங்கை பார்த்து தனக்கு வாழை இலைல ஒரு பெட்டி செஞ்சுதர சொல்லி கேட்டுச்சு

தன்னோட நண்பனோட உயர காப்பாத்த தன்கிட்ட உதவி கேட்ட முயலுக்கு அந்த குரங்கு ஒரு பெரிய பெட்டி வாழை இலைய மடிச்சு செஞ்சு கொடுத்துச்சு ,அத வாங்கிகிட்டு வேகமா தன்னோட நண்பன் இருக்குற இடத்துக்கு வந்த முயல் அந்த பெட்டி நிறய தண்ணி மோந்துச்சு ,அத தன்னோட நண்பன் கிட்ட காமிச்சு நண்பனே இந்த பெட்டிக்குள்ள வந்துடுங்க இதுல போதுமான அளவு தண்ணி இருக்கு இதுல நீங்க சுலபமா மூச்சு விடலாம்

எனக்கு பக்கத்துல இருக்குற ஒரு பெரிய குளம் தெரியும் அதுலயும் நிறய மீன்கள் இருக்கு நான் உங்கள அங்க கொண்டுபோயி விட்டுடறேனு சொல்லுச்சு ,உடனே அந்த மீனும் தாவி குதிச்சு அந்த பெட்டிலுக்குள்ள நீந்த ஆரம்பிச்சுச்சு , அந்த பெட்டியை எடுத்துக்கிட்டு காட்டு பகுதியை கடக்க ஆரம்பிச்சுச்சு முயல்

அப்பத்தான் அந்த குரங்கு அங்க வந்து ஒரு விஷயம் சொல்லுச்சு ,நீ நடந்து போறது மிக ஆபத்தான வழி அது வழியா போறப்ப உனக்கும் உன்னோட நண்பனான மீனுக்கும் ஆபத்து கண்டிப்பா வரும்,உன்னோட பலத்தாலும் அந்த மீனோட பலத்தாலையும் நீங்க தப்பிக்க முடியாது

அதனால எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தாலும் நாலுதடவ யோசிச்சு ஒரு முடிவு செய் ,இந்த உன்னோட மூளை தான் உன்ன காப்பாத்தும்னு சொல்லி அனுப்புச்சுச்சு
குரங்கு சொன்னத கேட்ட முயலுக்கு பயம் வந்திடுச்சு உடனே தன்னோட நண்பனை எப்படினாலும் காப்பாத்தியே ஆகணும்னு முடிவு செஞ்சு இருந்த முயல் ,என்ன ஆபத்து வந்தாலும் இந்த காட்ட விட்டு போய் புது குளத்துல தன்னோட நண்பன விட்டு அவனோட உயர காப்பாத்தணும்னு நினச்சுகிட்டே தன்னோட பயணத்தை தொடங்குச்சு

கொஞ்ச தூரம் கூட போகல ஒரு மிக பெரிய கழுகு அந்த முயலையும் மீனையும் பார்த்துடுச்சு ,இன்னைக்கு எப்படியும் ரெண்டு பேரையும் பிடிச்சி தின்னுடனு மேல இருந்து வேகமா பறந்துவந்து கொத்த பார்த்துச்சு கழுகு ,அப்ப பக்கத்துல இருந்த மரத்துக்கு அடியில மறைஞ்சு தப்பிச்சுச்சு முயல்
அப்பத்தான் முயலுக்கு புரிஞ்சுச்சு நாம அந்த புது குளத்துக்கு போகணும்னு கழுக ஏமாத்திட்டு தான் போக முடியும் அத விட்டுட்டு வெளியில போனாலும் ,இல்ல இதே மாதிரி பதுங்கி இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை ,நேரம் ஆக ஆக மீன் வச்சிருந்த பெட்டியில தண்ணி வேற ஒழுக ஆரம்பிச்சுடுச்சு ,அப்பத்தான் அந்த ஆபத்தை எப்படி சமளிக்குறதுனு யோசிச்சுச்சு

அப்பத்தான் முயல் ஒரு விஷயத்தை கவனிச்சுச்சு ,சூரிய வெளிச்சம் பட்டு அந்த தண்ணி எதிரொலிக்கிறத பார்த்துச்சு ,உடனே அதுக்கு ஒரு புது யோசனை வந்துச்சு ,
தான் மறைஞ்சு இருந்த மரத்துக்கு அடியிலே இருந்து வெளிய வந்த முயல் நல்லா சூரிய வெளிச்சம் படுற மாதிரி அந்த பெட்டியை சாச்சி பிடிச்சிச்சு ,முயல் வெளிய வந்தத வானத்துல பயந்துகிட்டு இருந்த கழுகு பார்த்துட்டு வேகமா வந்து கொத்த பார்த்துச்சு ,

அந்த நேரத்துல சரியா பெட்டியை சாச்சி பிடிச்ச முயல் கழுகோடா கண்ணுல சூரிய வெளிச்சம் கூசுற மாதிரி எதிரொலிச்சுச்சு ,இத கொஞ்சம்கூட எதிர்பார்க்காத கழுகு நேரா வந்து தரையில மோதிடுச்சு ,என்ன நடந்ததுன்னு தெரியாம தரையில மோதின கழுகுக்கு தலை சுத்திடுச்சு ,அதனால் எழுந்து நடக்க கூட முடியல
இந்த சந்தர்ப்பத்துக்கு காத்துகிட்டு இருந்த முயல் வேகமா ஓடி போய் அந்த குளத்துக்கிட்ட வந்துடுச்சு ,அப்பத்தான் அங்க இன்னொரு ஆபத்து அதுக்காக காத்துகிட்டு இருந்துச்சு
அங்க ஒரு மிக பெரிய பாம்பு உக்காந்து இருந்துச்சு ,அத பார்த்ததும் முயலுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு ,இப்ப இந்த புது பிரச்னையை எப்படி சமளிக்குறதுனு பார்த்துச்சு

அப்பாவும் அந்த குரங்கு சொன்ன யோசனைதான் முயலுக்கு வந்துச்சு ,எப்படி இருந்தாலும் இந்த பாம்ப சண்ட போட்டு ஜெயிக்க முடியாது ,எப்படி இருந்தாலும் நாம இந்த பாம்ப தாண்டித்தான் புது குளத்துக்கு போக முடியும் ,அதுக்கும் நேரம் கொஞ்சம்தான் இருக்கு ,ஏற்கனவே தண்ணி சொட்டு சொட்டா வடிஞ்சு உள்ள இருந்த மீன் மூச்சு விட கூட முடியாம நீந்திக்கிட்டு இருந்துச்சு
அப்பதான் முயலுக்கு ஒரு புது யோசனை வந்துச்சு ,அடடா பாம்பு அரசே நீங்க இங்கதான் இருக்கீங்களா நான் உங்கள பார்க்கத்தான் அடுத்த காட்டுக்குள்ள இருந்து வந்திருக்கேன்னு சொல்லுச்சு
திடீர்னு முயல் இப்படி சொன்னதும் டேய்! இது மாதிரி எத்தனை பேர பாத்திருக்கேன் கதை சொல்லுறத விட்டுட்டு அந்த பெட்டியில என்ன வச்சிருக்கனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த முயல் சொல்லுச்சு அரசே உங்களுக்காக எங்க ஊர் குளத்துல இருந்து மீன் பிடிச்சி கொண்டுவந்தேன் ஆனா இந்த பெட்டி செஞ்ச இலை ஏதோ விச செடி போல

இங்க பாருங்க இலை பட்டு தண்ணி விஷமாகிடுச்சு போல அதான் இந்த மீன் இப்படி நீந்த முடியாம கிடக்கு ,ஆனா நீங்க இந்த காட்டுலயே மிக பெரிய பாம்பு சாதாரண செடி விஷம் உங்கள ஒன்னும் செய்யாது நீங்க இந்த மீன சாப்பிடுங்க ,அப்படி நீங்க சாப்டிங்கனா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும் நானும் இந்த காட்டுலயே வாழ்ந்து உங்க புகழை பரப்புவேன்னு சொல்லுச்சு
இத கேட்ட பாம்புக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு , ஏன்டா விஷம் கலந்த தண்ணியில இருந்த மீன என்ன சாப்பிட சொல்றியா ,எனக்கு ஏதாவது ஆபத்து வரும் என்னோட இடத்த நீ பிடிச்சிக்கிடலாம்னு யோசனை போலன்னு சொல்லி சீருச்சு ,அப்பத்தான் முயலுக்கு ஒரு நிம்மதி வந்துச்சு ,அப்பாடா எப்படியும் இந்த மீன பாம்பு திங்காது ,தன்னோட நண்பன் எப்படியும் பொழச்சுப்பான்னு நிம்மதியாச்சு

அப்பத்தான் தனக்கும் பாம்புனால ஆபத்து இருக்குங்கிற உண்மை முயலுக்கு தெரிஞ்சது ,அடடா மீன எப்படியோ பொய் சொல்லி காப்பாத்திட்டோம் இப்ப நம்மள நாம எப்படி காப்பாத்திக்கிறது யோசிக்க ஆரம்பிச்சுச்சு ,அப்ப அந்த மீன் மெதுவா சொல்லுச்சு இந்த தண்ணிய நீ கொஞ்சம் குடின்னு சொல்லுச்சு
எதுக்கு இப்ப இந்த தண்ணிய குடிக்க சொல்லி மீன் சொல்லுதுனு ஒருநிமிசம் யோசிச்ச முயலுக்கு மீனோட சாமர்த்தியம் புரிஞ்சி போச்சு ,உடனே கொஞ்சூனு தண்ணிய அந்த வாழை இலை பெட்டியில இருந்து குடிச்சுச்சு ,இத பார்த்த பாம்பு எதுக்கு இந்த தண்ணிய இந்த முயல் குடிக்குதுனு யோசிச்சுச்சு

ஆனா முயல் சொல்லுச்சு ,உங்களுக்கு விஷம் கொடுக்குற அளவுக்கு எனக்கு தைரியமோ பகையோ உங்க கிட்ட கிடையாது அரசே ,இப்ப பாருங்க இந்த தண்ணிய குடிச்சுட்டேன் இப்ப பாருங்க நான் நல்லா தான் இருக்கேன் என் உடம்புலேயே இந்த விஷம் ஒன்னும் செய்யலன்னு சொல்லிகிட்டே ,மயக்கம் வந்த மாதிரி நடிச்சுச்சு முயல்
முயல் தன்னோட யோசனைய சரியா புரிஞ்சிகிட்டு நடிக்க ஆரம்பிச்சுடுச்சுனு நினைச்ச மீன் குளத்துக்குள்ள குதிக்க தயாரா இருந்துச்சு ,மயக்கம் வந்த மாதிரி நடிச்ச முயல் மெதுவா தள்ளாடிக்கிட்டே போயி அந்த பெட்டியோட குளத்துக்குள்ள போட்டுடுச்சு ,

நண்பனோட உதவினால பொழச்ச மீன் அதுக்கு அப்புறமா அத முயலோட ரொம்ப நட்போட இருந்துச்சு , ஆனா அந்த பாம்ப பாக்குறப்ப மட்டும் மயக்கம் போட்டு விழுறத தினசரி வடிக்கியாவே ஆக்கி கிடுச்சு முயல் ,இத பார்த்த பாம்பும் இவன் வேற எப்ப பாத்தாலும் என்முன்னாடி வந்து விழுகுறானு சொல்லி முயல திங்கணும்னு இருந்த அசையவே விட்டுடுச்சு