வெள்ளை உள்ளான் பறவையும் அனுமனும் -Sanderling Bird and Hanuman

வெள்ளை உள்ளான் பறவையும் அனுமனும் -Sanderling Bird and Hanuman:- முன்னொரு காலத்துல ஒரு மகா சமுதாரத்தோட கரையில வெள்ளை உள்ளானு சொல்ல படுற sanderling பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

Flock of Sanderling Birds Arriving on the Seashore

அந்த பறவைகள் கடற்கரையிலே ஒதுங்குற நத்தைகள் ,சிப்பிகள்ல இருக்குற பூச்சிகளை பிடிச்சி தின்னு தங்களோட வாழ்க்கையை நடத்திக்கிட்டு வந்துச்சுங்க ,அப்ப ரெண்டு பறவைகள் கடற்கரை ஓரமா முட்டையிட்டு தங்களோட குட்டி பறவை வரவுக்காக காத்துகிட்டு இருந்துச்சுங்க

Birds Foraging and Laying Eggs

அப்ப ஒருநாள் அந்த கடல்ல இருந்து வந்த பெரிய அலை அந்த முட்டைகளை அடிச்சிட்டு போய்டுச்சு ,தங்களுக்கு ஒரு வாரிசு வரப்போகுதுனு காத்துகிட்டு இருந்த அந்த குட்டி பறவைகள் ரொம்ப சோர்ந்து போச்சு

The Wave Destroys the Eggs

அடுத்த வருஷம் அதே மாதிரி முட்டையிட்ட பறவைகள் நேரா கடற்கரைக்கு வந்து கடல பார்த்து வேண்டிகிடுச்சுங்க , கடலே கடலே ஏற்கனவே எங்களோட முட்டைகள் உங்க அலை அடிச்சிட்டு போய்டுச்சு ,இந்த வருஷமாவது எங்க முட்டைகள் பொறிக்க வைங்க ,இந்த வாழ்க்கையில எங்களுக்கும் ஒரு குழந்தை வேணும்னு வேண்டி கேட்டுக்கிடுச்சுங்க

Birds Praying to the Sea

அப்பதான் கடல் பேசுச்சு , தினம் தினம் அலையடிக்குறது என்னோட வேலை அதுக்காகவே படைக்க பட்டவன் நான் ,அந்த அலையாலதான் உங்களுக்கு சாப்பாடே கிடைக்குது ,நான் அலை அடிச்சி கொண்டுவந்து போடுற பூச்சிகளை வச்சுதான் உங்க கூட்டமே உயிர் வாழுது ,என்னால என்னோட விதிய மாத்திக்க முடியாதுனு சொல்லிடுச்சு

The Sea Responds

இத கேட்ட பறவைகளுக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,கடற்கரையில வாழுற வாழ்கை கொடுத்த கடவுள் , அந்த கடலாலயே நமக்கு தொந்தரவு கொடுக்குறாரேன்னு வருத்தப்பட்டுச்சுங்க,அப்பதான் இந்த கடவுள் நம்மளை கைவிட மாட்டருனு ஒரு நம்பிக்கையும் வந்துச்சு

Birds Feel Sadness and Hope

அப்பதான் அங்க ஒரு குரங்கு வந்து கடற்கரையில நின்னு சாமி கும்புடுறத பார்த்துச்சுங்க ,அந்த குரங்கு ஒரு மனுசனா போலவே நடந்துக்கிச்சு ,அந்த குரங்க பார்த்த ஒரு வயசான பரவ அங்க பாருங்க அது யாருனு தெரியுதா அதுதான் குரங்கு கடவுள் அனுமன்

Hanuman Arrives

உங்களோட வேண்டுதலை நிறைவேற்றவே கடவுள் இங்க வந்திருக்காரு ,நீங்க உங்களோட வேண்டுதலை அவருகிட்ட சொல்லுங்கன்னு சொல்லுச்சு ,உடனே வேகமா அனுமன் கிட்ட போன குட்டி பறவைகள் ரெண்டும் ,அனுமனை வணங்குச்சுங்க

Birds Approach and Worship Hanuman

உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாரு அனுமன் ,அதுக்கு அந்த பறவைகள் தாங்க வருசா வருஷம் முட்டை இடுறதும் ,கடல் அலைகள் அதை கொண்டு போய்டுறதையும் சொல்லி வறுத்த பட்டுச்சுங்க அந்த குட்டி பறவைகள் ,இத கேட்ட அனுமன் சொல்லுச்சு ஓஹ் இயற்க்கையோட சேர்ந்து வாழுற நீங்க இயற்கய மாத்த நினைக்குறீங்களானு கேட்டாரு

Birds Share Their Story with Hanuman

அதுக்கு அந்த பறவைகள் சொல்லுச்சு இல்லை அனுமனே எங்களுக்கு இந்த கடலை மாத்தி அமைக்கிற எண்ணம் இல்லை ,இந்த கடலை நம்பி வாழ்க்கை நடத்துற எங்களுக்கு எங்க முட்டைகளை பாதுகாக்க மட்டும் உதவி செய்ய சொல்லுங்கன்னு சொல்லுச்சுங்க

Birds Clarify Their Simple Request

உடனே அனுமன் கடல் கிட்ட போயி ,ஏ கடலே இந்த குட்டி பறவைகள் முட்டையிடுற இடத்துல மட்டும் பெரிய அலைகளை விடாம இருக்க முடியுமான்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த கடல் சொல்லுச்சு ,பெரிய அலைகள் அடிக்கிற வாழ்க்கையை எனக்கு கொடுத்துட்டு இப்ப என்ன கெட்டவன்னு சொல்லறீங்க ,நான் அடிக்கிற பெரிய அலைகளை வச்சு நிறய உயிரினங்கள் வாழுது ,அப்படி இருக்கிறப்ப இந்த குட்டி பறவைகளுக்காக அதுங்கள பட்டினி போடா முடியாதுனு சொல்லுச்சு கடல்

Hanuman Intercedes with the Sea

இத கேட்ட குட்டி பறவைகள் குரங்கு கடவுளான அனுமன் கூட நமக்கு உதவி செய்ய முடியாத நிலையில இருக்குறாரேன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க , ஆனா அனுமன் தன்னோட தலையில இருந்து ஒரு முடிய எடுத்து கடற்கரையில நட்டு வச்சாரு ,

Despair and the Planted Hair

கொஞ்ச காலத்துல அந்த முடி பெரிய செய்யா வளர்ந்துச்சு ,அது கடற்கரையில பாதியும் ,கடலுக்கு உள்ள பாதியும் வளர்ந்து பெரிய காடா மாறுச்சு ,அந்த பெரிய காடு கடல் அரசனோட அலைகளை கட்டு படுத்துச்சு

The Hair Grows into a Mangrove Forest

எவ்வளவு பெரிய அலைகள் அடிச்சாலும் அது கடற்கரையில இருந்த குட்டி பறவைகளோட முட்டைகள் இருக்குற இடத்துக்கு வர முடியல ,அதே நேரத்துல பறவைகளுக்கான உணவான பூச்சிகளும் அங்க நிறய இருந்துச்சு

Waves Blocked and Food Abounds

தங்களோட முட்டைகளை காத்த அனுமனுக்கு நன்றி சொல்லுச்சுங்க அந்த குட்டி பறவைகள்

Birds Thank Hanuman

-இந்தோனேசியா கிராமத்து இலக்கிய கதைகளில் மங்காரோஸ் காடுகள் எப்படி உருவாகின என்பதற்கு சொல்லப்படும் வாய் மொழி கதை இதுவாகும்

1 thought on “வெள்ளை உள்ளான் பறவையும் அனுமனும் -Sanderling Bird and Hanuman”

Comments are closed.