
குரல் இழந்த விட்டில் பூச்சி -The Little Caterpillar Who Found His Voice:-ஒரு மலை அடிவாரத்தில ஒரு மிகப் பெரிய புல்வெளி இருந்துச்சு அந்தப் புல்வெளியிலே நிறைய வீட்டில் பூச்சிகளும் வண்டுகளும் பொன்வண்டுகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

மனுஷங்களைப் போலவே பெரிய ராஜாங்கம் அமைச்சு அதுகளுக்குள்ளையே கூட்டம் கூட்டமா வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க அந்த பூச்சிங்க அங்கதான் ஒரு விட்டில் பூச்சி சேட்டை செஞ்சு கிட்டு இருந்துச்சு பெரியவங்க சொல் கேட்காம தன்னுடைய இஷ்டத்துக்கு வாழனும்னு நெனச்ச அந்த விட்டில் பூச்சி ஒரு நாள் பெரிய ஆபத்த சந்திச்சுச்சு

அந்தப் பூச்சிகள் கூட்டம் எந்த எந்த உணவ சாப்பிடணும் எந்த இலைகளை சாப்பிடணும் அப்படின்னு ஒரு வரையறை வச்சிருந்தாங்க அந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்துனாங்க மூத்தவங்க சொல் பேச்சு கேட்கிறது தப்புனு நினைச்ச விட்டில் பூச்சி ஒரு நாள் நான் இந்த உலகத்துல இருக்கிற எல்லா செடிகளையும் தின்னு பார்த்து அதோட சுவை என்னன்னு தெரிஞ்சுக்க போறேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு கருப்பு கலர் இலைய சாப்டுச்சு

உடனே அதோட நாக்கு எல்லாம் ரொம்ப அரிக்க ஆரம்பிச்சிருச்சு அடடா வீண் வீம்புக்காக தேவையில்லாத ஒரு காரியம் செஞ்சிட்டோம் என்னன்னே தெரியாத ஒரு இலைய சாப்பிட்டு இப்ப நாக்கு ரொம்ப அரிக்குதே வேகமா வைத்தியரான குண்டு சிகப்பு வண்டு கிட்ட போவோம் அப்படின்னு சொல்லிட்டு சிகப்பு வண்டு கிட்ட போச்சு சேட்டைக்கார விட்டல் பூச்சி

அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிருச்சு வீட்டில் பூச்சியோட பேசும் திறமை மொத்தமா போயிருந்துச்சுனு அதனால தனக்கு என்ன நடந்துச்சுன்னு கூட சொல்ல முடியல தன் கையோடு எடுத்துட்டு வந்திருந்த தான் சாப்பிட்ட அந்த கருப்பு இலைய குண்டு வண்டு கிட்ட காமிச்சுச்சு விட்டில் பூச்சியோட நாக்கை சோதித்து பார்த்த வண்டு நீ சாப்பிட்டது அரிப்பு இலை அதையெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு நமக்குள்ள வரைமுறை சட்டம் இருக்கு அதையும் மீறி சாப்பிட்டதால உன்னுடைய குரல் போயிடுச்சு அப்படின்னு சொல்லுச்சு

இதனால ரொம்ப சோர்ந்து போன வீட்டில் பூச்சி அன்னைல இருந்து வெளியே எங்கேயும் சுத்த போகாம மத்தவங்க முகத்தை கூட பார்க்காம தனிமையில வாழ ஆரம்பிச்சுச்சு இதைப் பார்த்த அந்த விட்டில் பூச்சியோட நண்பர்கள் ரொம்ப சோர்ந்து போனாங்க அவங்களுக்குள்ள கூடி பேசி நடந்தது நடந்து போச்சு இந்த விட்டல் பூச்சியை நம்ம தேத்தி ஆகணும் அப்படின்னு நினைச்சாங்க

அப்பத்தான் அவங்களுக்கு ஒரு யோசனை வந்துச்சு உடனே நேரா பேச்சுத் திறமை இழந்த விட்டல் பூச்சி கிட்ட வந்து நாங்க ஒரு இசைக் கச்சேரி நடத்தப் போறோம் எங்களுக்கு எல்லா இசைக்கருவிகளும் நாங்களே செஞ்சுக்கிட்டோம் தாள கருவிகளை பொன்வண்டும் பாடல் பாடுவதற்கு விட்டல் பூச்சியும் எல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டோம் ஆனா பீப்பி ஊதுறதுக்கு ஆள் இல்ல நீ வேணா முயற்சி செஞ்சு பாக்குறியா அப்படின்னு சொல்லி ஒரு குட்டி பீப்பி விட்டில் பூச்சி கிட்ட குடுத்துட்டு போயிட்டாங்க

தனிமையில வாடிக்கிட்டு இருந்த பேச்சு இழந்த விட்டில் பூச்சி அந்த பீப்பிய எடுத்து ஊத ஆரம்பிச்சுச்சு ரொம்ப நாளா பேசக்கூட முடியாம இருந்த தன்னுடைய வாயிலிருந்து இனிமையான சத்தம் வருவதை கேட்டதும் உற்சாகமாயிடுச்சு அந்த விட்டில் பூச்சி கொஞ்சம் கொஞ்சமா நல்ல இசைக்க கத்துக்கிட்ட விட்டில் பூச்சி அந்த புல் வெளி தேசம் முழுசும் தன்னுடைய புகழை பரப்புச்சு ஒரு ஆபத்து ஏற்பட்டதும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுருச்சு அப்படின்னு சொல்லி வீட்டில் முடங்க கூடாதுன்னு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்ல சொல்லப்படுற கிராமிய கதை இது
