வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது நடந்த சம்பவம் இது
ஒரு நாள், வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் நிறையக் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய விதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள்.
அவளை வேடிக்கை பார்க்கப் பெரும் கட்டம் கூடிவிட்டது. அதனாய் போக்குவரத்துக்குப் பொய் இடைாம் ஏற்பட்டது.
போக்குவரத்துக் காவல் துறையினர் உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கலாட்டா செய்து கொண்டிருந்த பெண்ணைச் சுற்றி வளைத்து விசாரிக்கையில், அவள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் என்று தெரியவந்தது உடனே நம் ஊளர் போலீஸ்காரர்கள் போலவே அவர்களும் பயந்து மேலதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர்
விரைந்து வந்த மேலதிகாரிக்கும் சர்ச்சிலின் மகளை அந்த இடத்தை விட்டு எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியவில்லை
கடினமாக நடந்து கொண்டால் அவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று நினைத்துப் பயந்த அவர், அந்த விஷயத்தைப் பிரதமரிடமே நேரில் சென்று சொல்லிவிடுவது என்று முடிவு செய்து, நேரில் அவரைச் சென்று சந்தித்தார்
பிரமதமரின் மகளிடம்
அவர் முன் நின்று கைகளைப் பிசைந்தபடி தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னார்
அதைக் கேட்டு கோபம் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில் அந்த அதிகாரியைப் பார்த்து, “டியர் ஆஃபீஸர் ஃபிரெஞ்சு வீதியும் பிரிட்டிஷ் நீதியும் நேரானவை என்பதை உலகமே அறியும். இந்த உண்மைக்குக் களங்கம் நேர்வதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. நீங்கள் அவளை உடனே கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். மேலும் இந்த விஷயத்தை பிரிட்டனிலிருந்து வெளிவரும் அத்தனை பத்திரிகைகளுக்கும் சொல்லி, செய்தியாக வர ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார்
அவரது பதிலைக் கேட்ட அதிகாரி. அவரது நெறிவழுவா நீதியை எண்ணி பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்