நியூட்டன் Tamil Kids Story

பூமிக்கு ஈர்ப்புச் சக்தி இருப்பதால்தான் ஆப்பிள் பழம், மாந்திலிருந்து மேலே போகாமல் கீழே விழுந்தது என்ற மிகப் பெரிய உண்மையைக் கண்டறிந்து கூறியவர் ஐசக் நியூட்டன், இந்தக் கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து அரசு அவருக்கு சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தது. அன்று முதல் அவர் ‘சர் ஐசக் நியூட்டன் அழைக்கப்பட்டார் என

அவர் வாழ்ந்த நாளில் மிகப் பெரும் விஞ்ஞான மேதையாகத் திகழ்ந்தார். ‘தான் என்ற அகந்தை இல்லாதவர் அடக்கமே உருவானவர் வின் புகழ்ச்சிகளை அறவே வெறுத்தவர். இத்தகைய அரிய குணங்களைக் கொண்டிருந்ததால்தான் அவர் இறந்த பின் அவர் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்ற புகழ்பெற்ற தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது

வெஸ்ட்மின்ஸ்டர் அபே ‘யில் அடக்கம் செய்யப்படும் கவுரவம் எல்லா ஆங்கிலேயர்களுக்கும் கிடைக்காது. சிறந்த அரசாட்சி செய்த மன்னர்கள் அறிவிற் சிறந்த மேதைகள், சிறந்த சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே அத்தகைய கவுரவம் கிடைக்கும். சர் ஐசக் நியூட்டனுக்கும் அத்தகைய கவுரவம் கிடைத்தது

அவர் உயிருடன் இருந்தபோது ஒரு சமயம் ஒரு பெண்மணி அவரைச் சந்தித்து, அவரது அறிவுக் கூர்மை

உழைப்பு ஆகியவற்றைப் பற்றி வருவாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டார். அந்தப் புகழ்ச்சியைக் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது அவருக்கு

உடனே அவர் அந்தப் பெண்மணியைப் பார்த்து, அம்மா! உண்மை என்னும் பெரும் சமுத்திரத்தின் கரையில் சிறு சிறு கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போன்றவன்தான் நான். என்னைப் பெரிய மேதை என்று வீணாகப் புகழாதீர்கள். அதற்கு நான் அருகதையற்றவன்” என்று கூறினார்

அவரது உண்மையான உள்ளத்திலிருந்து வந்த அவரது பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்து நின்றுவிட்டார் அந்தப் பெண்மணி