Why is the sky blue? வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது சிறுவர் கதை:-உலகம் தோன்றின பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு அப்புறமா சூரியனுக்கு நிறைய வண்ணங்கள் நண்பர்களா மாறுனாங்க சிவப்பு நண்பர், ஆரஞ்சு நண்பர், மஞ்சள் நண்பர், பச்சை நண்பர், நீலி நண்பர், ஊதா நண்பர், மற்றும் கருநீல நண்பர்

இப்படி ஏழு நண்பர்களோட சூரியன் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதுல நீல வண்ண நண்பர் மட்டும் கொஞ்சம் சேட்டை பிடிச்சவரா இருந்தாரு

அவருக்கு தான் தான் உலகத்திலேயே அழகான நிறம்னு ஒரு நெனப்பு இருந்துச்சு அதனாலேயே எல்லா வண்ண நண்பர்கள் கிட்டயும் வம்பு இழுத்துக்கிட்டே இருப்பாரு

பூமியோட வளிமண்டலத்தில இருந்த காற்று துகள்களை ஒருநாள் சந்திச்சாறு நீல நண்பர் அப்பத்தான் தான்தான் இந்த உலகத்திலேயே அழகான வண்ணம் அப்படின்னு தன்னோட அழகு பத்தி தம்பட்டம் அடிச்சுச்சு நீல நிறம் அதோட பேச்சு சுத்தமா பிடிக்காததுனால மத்த நிறங்களோட மட்டும் நண்பனா மாறி சந்தோசமா இருந்துச்சு கேட்டு காற்று துகள்கள் துகள்கள்

ஓ என்ன விட்டுட்டு மத்த வண்ணங்களோட நீ நண்பனா இருக்கியா அப்படின்னு சண்டை போட ஆரம்பிச்சுச்சு நீல நிறம் போகப் போக இந்த சண்டை ரொம்ப பெருசா ஆகிடுச்சு அப்பத்தான் வளிமண்டலத்தில் இருக்கிற காற்று துகள்கள் இனிமே உன்ன பூமியை போய் சேர விடமாட்டேன் சூரியன்ல இருந்து வர்ற எல்லா வண்ணங்களையும் பூமியை சேர்ந்து அடைய வழி விட்டுச்சே தவிர உனக்கு இனிமே வழி விட மாட்டேன் அப்படின்னு சொல்லி நீல நிறத்த பூமிக்கு போய் சேர விடாம செயல்படுத்தவும் ஆரம்பிச்சுச்சு

அப்பத்தான் சூரியன் கதிர்கள்ல வெளிவந்த எல்லா வண்ணங்களும் சுலபமா பூமியைப் போய் அடங்கிச்சுங்க ஆனா திமிர் பிடித்த நீல நிறம் மட்டும் பூமிக்கு போய் அடையாமல் வளிமண்டலத்தில் இருக்கிற காற்று துகள்களில் மோதி பிரதிபலிக்க ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் பூமியிலிருந்து பார்க்கிற எல்லாருக்கும் வானம் நீல நிற வண்ணமா தெரிய ஆரம்பிச்சுச்சு

சூரியனே எடுத்துச் சொல்லியும் இந்த சண்டை முடிகிறாப்ல இல்ல இந்த சண்ட முடியுற வரைக்கும் வானம் நீல நிறமா தான் இருக்கும் அதை பிரதிபலிக்கிற கடலும் நீளமா தான் இருக்கும்

வானம் ஏன் நீலமாக இருக்கிறது? – குழந்தைகளுக்கான எளிய விஞ்ஞான விளக்கம்
குழந்தைகளே, சூரியனின் ஒளி வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இந்த வெள்ளை ஒளியில் ஏழு வண்ணங்கள் (வானவில் வண்ணங்கள்) இருக்கின்றன: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ (கருநீலம்), ஊதா.
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை (காற்று அடுக்கு) தாண்டி வரும்போது, காற்றில் உள்ள சிறு சிறு மூலக்கூறுகள் (நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்றவை) ஒளியை சிதறச் செய்கின்றன. இதை ரேலே சிதறல் (Rayleigh Scattering) என்று அழைக்கிறோம்.

முக்கிய காரணம்:
- நீல வண்ணத்தின் அலைநீளம் மிகவும் சிறியது (குறுகியது).
- சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலைநீளம் பெரியது (நீளமானது).
சிறிய அலைநீளம் உள்ள நீல வண்ணம் அதிகமாக சிதறுகிறது – அதாவது எல்லா திசைகளிலும் துள்ளி எங்கும் பரவுகிறது. அதனால் நாம் வானத்தை நீலமாக பார்க்கிறோம்.
ஆதாரம் (Proof): நீங்கள் ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர் ஊற்றி, சிறிது பால் சேர்த்து கலக்கினால், ஒளியை சிதற வைத்து நீல நிறம் தெரியும். இதுதான் வானத்தில் நடக்கும் விஷயம்!

மாலையில் ஏன் சிவப்பு? மாலையில் சூரியன் தாழ்ந்து இருக்கும்போது, ஒளி அதிக தூரம் பயணிக்க வேண்டும். அப்போது நீல வண்ணம் எல்லாம் சிதறி முடிந்து, சிவப்பு மட்டும் நேராக நம்மிடம் வருகிறது. அதனால்தான் சூரிய உதயம் மற்றும் மறைவு சிவப்பாகத் தெரிகிறது!
இப்படி இயற்கை நமக்கு ஒரு அற்புதமான வண்ண விளையாட்டு காட்டுகிறது!