விக்ரமாதித்தன் வேதாளம் கதை -8 அரசரின் கடமை – Vikram and Betal Story in Tamil:- என்னதான் விக்ரமாதித்தன் பெரிய வீரனா இருந்தாலும் தொடர்ந்து வேதாளத்தை பிடிச்சி தூக்கிட்டு போனாலும் அந்த வேதாளம் கேக்குற ஒவ்வொரு கேள்விக்கும் அவனுக்கு விடை தெரிஞ்சிருந்தது ,அத சொல்லலைனா அவனோட தலை வெடிச்சிடும்ங்கிறதால் விடய சொல்ல வேண்டியதா போச்சு ,இத கரணம் காட்டி வேதாளம் திரும்பவும் புளியமரத்துல ஏறிக்கிடுச்சு

இந்த வாட்டி அந்த வேதாளம் கதை சொன்னா அதுக்கு விடை தனக்கு தெரியக்கூடாது அப்பத்தான் குருவோடு வேண்டுதல்படி இந்த வேதாளத்தை அவருகிட்ட ஒப்படைச்சிடலாம்னு நினைச்சான்
அவன் நினச்சா மாதிரியே வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு

ஒரு மிக பெரிய சாம்ராஜ்யத்தை ஒரு பேரரசன் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தான் அவன் ஒருநாள் காட்டுக்கு வேட்டையாட போனான் ,ரொம்ப நேரம் வேட்டையாடுனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அவன் தன்னோட படைகளை விட்டு ரொம்ப தூரம் விலகி போனதையும் ,நடு காட்டுக்குள்ள வந்து மாட்டிகிட்டதாயும் உணர்ந்தான்

எவ்வளவு முயற்சி செஞ்சும் அவன் வந்த பாதையை கண்டுபிடிக்கவே முடியல ,எப்படி அரண்மனைக்கு திரும்பி போகலாம்னு நினைச்சுகிட்டு இருந்தப்ப ஒரு வாலிபன் அந்த பக்கமா போறத பார்த்தாரு

வாலிபனே இந்த காட்டுல நீ மட்டும் ஏன் தனியா நடந்து போறேன்னு கேட்டாரு அரசர் ,அதுக்கு அந்த பையன் இந்த காட்டுல இருக்குற குரு கிட்ட நல்லா படிச்சு முடிச்சுட்டேன்,நான் புத்திசாலிக்கிறதுனால என்ன பக்கத்துல இருக்குற நாட்டுக்கு போயி அரசர்களுக்கு உதவி செய்ய சொல்லி குரு அனுப்பி வச்சாருனு சொன்னான்

இத கேட்ட அரசர் சொன்னாரு உன்ன எனக்கு புடிச்சிருக்கு நானும் ஒரு பேரரசன்தான் நீ என்கூட அரண்மனைக்கு வானு சொல்லி கூட்டிகிட்டு போனாரு , வழி தெரியாத அரசனுக்கு வானத்துல இருந்த நட்சத்திரங்கள பார்த்து சரியான வழி சொன்னான் அந்த வாலிபன்

வாலிபன தன்னோடவே தங்க வச்சிக்கிட்ட அரசர் அவனோட புத்தி கூர்மைய பார்த்து வியந்தாரு ,எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அவன் தனித்துவமான சிந்திச்சு முடிவெடுக்கிறது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது

அதனால அந்த வாலிபன தன்னோட அரண்மனைல அமைச்சராக்கி அவனுக்கு ஒரு மாளிகையும் கொடுத்து கவுரவிச்சாரு
கொஞ்ச நாள் கழிச்சு அங்க வேலை செய்யிற பொண்ண அந்த வாலிபன் விரும்புனான் அவளை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி அரசர் கிட்ட கேட்டான்

ஒரு அண்ணன் மாதிரி உனக்கு நான் திருமணம் செஞ்சு வைக்கிறேன்னு சொல்லி அந்த பொண்ண போய் பார்த்தாரு அரசர் ,

ஆனா அந்த பொண்ணு அரசே நீங்க என்ன கல்யாணம் செஞ்சுகோங்க எனக்கு சின்ன வயசுல இருந்தே வசதியா வாழணும்னு விருப்பம் நான் வாழ்த ஒரு மாளிகையில தான் வாழ்வேன்னு சொன்னா

அவளோட விருப்பத்த கேட்ட வாலிபன் அரசே அவளோட விருப்பத்துக்கு பொருத்தமான ஆள் நீங்கதான் தயவு செஞ்சு அவளை நீங்களே கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு சொன்னான் அந்த வாலிபன்

ஆனா அரசர் கவலை படாதே பெண்ணே இந்த வாலிபன் சாதாரணமானவன் கிடையாது ,இவனோட திறமையை பாராட்டி இவனுக்கு ஒரு மாளிகையும் வசதியும் செஞ்சு கொடுத்துஇருக்கேன் நீ அங்க ரொம்ப வசதியா வாழலாம்னு சொல்லி ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சாரு அரசர்

–இந்த வாலிபன் ரொம்ப கருணை உள்ளம் கொண்டவன் இல்லையா ஒரு சாதாரண பெண் வசதியா வாழுறதுக்கு தன்னோட விருப்பத்த விட்டுட்டு அரசனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க துணிஞ்சுட்டேனேன்னு கேட்டுச்சு வேதாளம்

— வேதாளதோட உண்மையான கேள்வி யார் செஞ்சது சரினு தான் அதைத்தான் வேதாளம் வேற மாதிரி கேக்குதுனு நினச்சா அடுத்த வினாடி ,சரியான விடை விக்ரமாதித்தன் மனசுல உதிச்சது ,அத சொல்லலைனா அவனோட தலை ஆயிரம் துண்டா வெடிச்சிடும்னு வேதாளம் சொன்னதால அவன் அந்த கேள்விக்கு பதில் சொன்னான்
குடிமக்களோட வளத்தை பாதுகாக்குற அரசரோட வேலை , அந்த வாலிபனோட நன்மையையும் சேர்த்து ,ஆனா அரசர் தன்னோட குடிமகனான் வாலிபனுக்கு சந்தோஷத்தையும் சேர்த்து கொடுத்திருக்கார் அதனால இந்த விஷயத்துல அரசர் செஞ்சதுதான் சரியானது ஞாயமும் கூடன்னு சொன்னான்
இதுக்காகவே காத்துகிட்டு இருந்த வேதாளம் டக்குனு பாஞ்சு போயி மீண்டும் புளிய மரத்துல தொங்க ஆரம்பிச்சுச்சு ,மறுபடியும் முதல்ல இருந்து வேதாளத்தை பிடிக்க போனான் விக்ரமாதித்தன்