விக்ரமாதித்தன் வேதாளம் கதை -7 அரசர் கொடுத்த தண்டனை – Vikram and Betal Story in Tamil:- எத்தனை தடவ விக்கிரமாதித்தனுக்கு கதை சொல்லிட்டு புளியமரத்துல ஏறுனாலும், திரும்ப திரும்ப தன்னை விக்ரமாதித்தன் புடிச்சு தூக்கிட்டு போறத பார்த்து வேதாளத்துக்கு பயமே வந்திடுச்சு.

திரும்ப ஒருதடவை கதை சொல்லி அவன ஏமாத்தணும்னு சொல்லிட்டு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு வேதாளம்

ஒரு பழம்பெரும் ராஜாங்கத்த ஒரு அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு , உலகம் முழுவதும் அவரோட புகழ் பரவி இருந்துச்சு , பணத்துல மட்டும் இல்லாம பலத்துலயும் அவர் ரொம்ப உயரத்துல இருந்தாரு.
அவரோட படை அக்கம் பக்கத்துல இருக்குற எந்த அரசாரலையும் தோற்கடிக்க முடியாத அளவுக்கு பெருசா இருந்துச்சு.

அவருகிட்ட ஒரு அழகான அரண்மனை இருந்துச்சு உலகத்துல இருக்குற உயர்ந்த பொருட்கள் எல்லாத்தையும் வச்சு அந்த அரண்மனையை கட்டி இருந்தாரு அரசர்

ஒருநாள் அந்த அரண்மனையோட காவல் காரன் காவல் காக்காம தூக்கிகிட்டு இருந்தான் அப்ப அவனுக்கு ஒரு கனவு வந்துச்சு ,அதுல பக்கத்து நாட்டு அரசர் திடீர்னு படை எடுத்து அரண்மனைக்கு வர்றமாதிரி இருந்துச்சு உடனே விழிச்சிகிட்ட காவல்காரன் வேகமா அரசர்கிட்ட ஓடிப்போனான்,

அரசே அரசே பக்கத்து நாட்டு அரசர் நம்ம கூட நேரடியா மோதாம போர்க்களத்துக்கு வராம அரண்மனைய நோக்கி வர்றாருன்னு நினைக்குறேனு சொன்னான்!!!.

இத கேட்டு அதிர்ச்சி அடைஞ்ச அரசர் தளபதிய கூப்பிட்டு எல்லா பக்கமும் ஒற்றர்களை அனுப்பி விசாரிக்க சொன்னாரு

திரும்பி வந்த ஒற்றர்கள் அந்த காவலாளி சொன்னது உண்மைதானு சொன்னாங்க, உடனே தளபதி ஒரு பெரும் படையை திரட்டி அரண்மனை கோட்டை சுவத்துக்கு பின்னாடி மறைஞ்சு இருந்தாரு

மறுநாள் காலையில பக்கத்து நாட்டு அரசன் அரண்மனை கதவை நோக்கி தன்னோட படைகளோட வந்தான் ,அப்ப அவன் எதிர்பாராத மாதிரி உள்ள இருந்த படை வீரர்கள் அவன தாக்கி சண்டை போட்டு ஜெயிச்சாங்க , அவனையும் சிறைபிடிச்சாங்க

அரசருக்கு ரொம்ப சந்தோசமா போச்சு சரியான நேரத்துல தன்னை உஷார் படுத்தின காவலாளிக்கு தக்க சன்மானம் கொடுத்து பாராட்டணும்னு நினச்சு அரசவைக்கு வரசொன்னாரு

அரசவைக்கு வந்த காவலாளிக்கு மரியாதை கொடுத்த அரசர் , இந்த நாட்ட காப்பாத்துன உனக்கு என்னோட நன்றி , நாட்டுல நிறய ஒற்றர்கள் நான் வச்சிருக்கேன் ,அவுங்களுக்கு எல்லாம் தெரியிரத்துக்கு முன்னாடி உனக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சதுனு கேட்டாரு

அதுக்கு தயங்கி தயங்கி உண்மைய சொன்னான் காவலாளி ,அரசே அன்னைக்கு கொஞ்சம் அசதியா இருந்ததால லேசா தூங்கிட்டேன் அந்த நேரத்துல தான் கனவுல இந்த போர் தொடுக்க வர்ற விஷயம் எனக்கு தெரிஞ்சதுனு சொன்னான்

இதே கேட்ட அரசர் ஒரு பை நிறைய தங்க காசு அவனுக்கு பரிசு கொடுத்தாரு ,அதுக்கு அந்த காவலாளி நன்றி சொன்னான் ,ஆனா அரசர் அவனை பார்த்து இன்னைல இருந்து உனக்கு அரண்மனைல வேலை இல்லைனு சொல்லி அனுப்பிச்சுட்டாரு

இந்த காவலனுக்கு நல்ல பதவி கொடுப்பாருனு நினைச்ச எல்லாரும் இத பார்த்து குழம்பி போய்ட்டாங்க
–அப்பத்தான் இந்த வேதாளம் கேட்டுச்சு இந்த அரசர் அவன தன்னோட கூடவே வச்சுக்கிட்டா அவருக்கு நிறய நன்மை கிடைச்சிருக்கு இல்லையானு கேட்டுச்சு
— அதுக்கு விக்ரமாதித்தன் சொன்னான் அவருக்கு நன்மை கிடைக்கலாம் ஆனா கடமைல இருந்து தவருன அவன மாதிரியே இந்த இருக்குற எல்லாரும் ஒவ்வொருத்தரா அவன மாதிரியா பின் வாங்குவாங்க போர் இல்லாமலேயே இந்த ராஜாங்கம் தோத்துப்போகும் அதனால அந்த ராஜா செஞ்சது சரிதான்னு சொன்னாரு விக்கிரமாதித்தன்

அப்புறம் என்ன நான் போறேன்னு சொல்லிட்டு வேதாளம் திரும்பவும் புளிய மரத்துல தொங்க போய்டுச்சு ,தன்னோட கடமை இன்னும் முடியலைன்னு நினச்சா விக்ரமாதித்தன் ஓய்வு கூட எடுக்காம திரும்பவும் வேதாளத்தை பிடிக்க போனாரு