குட்டி பையன் சோமு Unleashing Wisdom: A Boy’s Journey:-ஒரு ஊருல சோமுனு ஒரு குட்டி பையன் இருந்தான் அவன் எப்பவும் அவுங்க அம்மா அப்பாவோட போன நோண்டிகிட்டே இருப்பான்
இத பார்த்த அவனோட அம்மாவும் அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்க ,அதனால அவன்கூட நிறய சண்ட போட்டாங்க
ஒருநாள் சோமுவோட அப்பா நிறைய புத்தகங்கள வாங்கிகிட்டு வந்து கொடுத்தாரு
வேண்டா வெறுப்பா அந்த புத்தகங்கள படிக்க ஆரம்பிச்ச சோமு ,கொஞ்ச நாள்ல போன் நோண்டுறத கொறச்சிகிட்டு நிறைய படிக்க ஆரம்பிச்சான்
அதனால் அவனோட அறிவு வளர்ந்துச்சு எந்த ஒரு புத்தகத்தையும் படிச்சி அதோட கருத்தையும் அவனால சுலபமா புரிஞ்சிகிட முடிஞ்சது
ஒருநாள் அவுங்களோட கார் ஸ்டார்ட் ஆகாம நின்னுடுச்சு ,சோமுவோட அப்பாவுக்கு என்ன செய்யுறதுனே தெரியல ,நாளைக்கு மெக்கானிக் கூட்டிட்டு வந்து சரி செய்யலாம்னு சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சி வேலைக்கு போய்ட்டாரு அவரு
அப்பத்தான் கார் வாங்குறப்ப கொடுத்த மேனுவல் புத்தகத்த எடுத்து படிச்சு பார்த்தான் சோமு ,அதுல இருந்த மாதிரி சில செட்டிங்ஸ் மாத்துனான் சோமு
வீட்டுக்கு திரும்பி வந்த அப்பாகிட்ட இப்ப கார ஸ்டார்ட் பண்ணி பாக்க சொன்னான் ,அவரும் ஸ்டார்ட் பண்ணுனாரு ,கார் எப்பயும் போல ஸ்டார்ட் ஆகிடுச்சு
மேனுவல் புத்தகத்த படிச்சு புரிச்சிக்கிடுற அளவுக்கு சோமு வோட அறிவு வளர்ந்தத நினச்சு ரொம்ப சந்தோச பட்டாரு அவரு
அதனால் இன்னும் நிறய புத்தகங்களை அவனுக்கு வாங்கி கொடுத்தாரு அவரு