A Miser’s Donkey- கஞ்சனின் கழுதை

A Miser’s Donkey- கஞ்சனின் கழுதை:-ஒரு ஊருல ஒரு கஞ்சன் இருந்தான் ,அவன் தன்னோட பேராசை காரணமா யாருக்கும் எதுவும் கொடுக்காம வாழ்த்துகிட்டு வந்தான்

அவனோட வீட்டுல ஒரு கழுதயும் ,நிறய பறவைகளும் இருந்துச்சு ,கஞ்சனான அவன் அந்த பறவைகளுக்கும் கழுதைக்கும் ஒண்ணுமே சாப்பிட கொடுக்க மாட்டான்

அந்த வீட்டுல இருந்த தோட்டத்துல இருக்குற புள்ள மட்டும் அந்த கழுதையும் ,பூச்சிகலை அந்த பறவைகளும் தின்னு உயிர் வாழ்ந்துச்சுங்க

சாப்பாடே கொடுக்காம தன்னை வேலை வாங்குற இந்த கஞ்சன்கிட்ட இருந்து எப்படியாவது தப்பிக்கணும்னு நினச்சுச்சு அந்த கழுதை

அப்ப ஒருநாள் அங்க இருந்த ஒரு பறவை செத்துப்போச்சு உடனே அந்த கஞ்சன் அந்த பறவைய தொக்கு தோட்டத்துக்கு வெளியில போட்டுட்டான்

இத பார்த்த கழுதைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தானும் செத்த மாதிரி நடிச்சா இந்த கஞ்சன் நம்மளையும் தொட்டத்துக்கு வெளியில தூக்கி போடுவான் நாம் எழுந்திரிச்சி ஓடிடலாம்னு நினச்சுச்சு

உடனே செத்த மாதிரி நடிக்க ஆரம்பிச்சுச்சு அந்த கழுதை ,இத பார்த்த கஞ்சனுக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,

இருந்தாலும் கஞ்சனுக்கு அந்த கழுதையை தூக்கி போட மனசு வரல ,அதனால தோட்டத்துல இருக்குற மரத்துக்கு அடியில பொதச்சு மரத்துக்கு உரமா மாத்திட நினச்சு குழி தோண்ட ஆரம்பிச்சான்

இத கவனிச்சா கழுதைக்கு அப்பத்தான் புரிச்சது தப்பிக்க முயற்சி செஞ்சு இப்ப குழியில போட்டி மூடி சாகப்போறோம்னு

இந்த கஞ்சன் கிட்ட இருந்து தப்பிக்கணும்னா இத விட்டா வேற வழி இல்லைனு முடிவு செஞ்ச கழுதை ,குழி தோண்டிகிட்டு இருந்த கஞ்சன குழிக்குள்ள முட்டி தள்ளிட்டு ஓடி போய்டுச்சு

Leave a comment