ஒரு காலத்துல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவருக்கு மூணு மகன்கள்
அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க
அந்த வியாபாரி எவ்வளவு முயர்ச்சி செஞ்சும் அவுங்கள ஒன்னு சேக்க முடியல
ஒருநாள் அந்த வியாபாரி மூணு மகன்களையும் கூப்பிட்டாரு
உங்களுக்கு ஒரு போட்டி இந்த கருப்பு கட்ட பிரிச்சி எல்லா கரும்பையும் ரெண்டா உடைக்கணும்னு சொன்னாரு
இதைக்கேட்ட மூணுபேரும் வேக வேகமா உடைக்க ஆரம்பிச்சாங்க
மூணுபேரும் ரொம்ப சுலபமா அந்த கரும்புங்கள உடைச்சாங்க
உடைச்சு முடிச்சு அவுங்களுக்குள்ள யார் பலசாலின்னு மீண்டும் சண்டை வந்துச்சு
இத பாத்த அந்த வியாபாரி போட்டி இன்னும் முடியல
இப்ப அந்த கரும்பு கட்ட பிரிக்காம யாரு முழுசா உடைக்க முடியும்னு கேட்டாரு
மூணு மகன்களும் முயற்சி பண்ணி பாத்தாங்க
கரும்பு பிரிச்சி உடைக்க வேகமா உடைக்க முடிஞ்சது
ஆனா இப்போ முடியலன்னு ரொம்ப வறுத்த பட்டாங்க
அப்பத்தான் அந்த வியாபாரி பேச ஆரம்பிச்சாரு
பாத்திங்களா நீங்களும் இந்த கரும்பு மாதிரிதான்,
தனி தனியா இருந்தீங்கன்னா உடைஞ்சி போயிடுவீங்க
ஆனா மொத்தமா கட்டா இருந்தீங்கன்னா உடையாம பலமா இருப்பீங்க
ஒற்றுமையே பலம்னு சொல்லி மூணு மகன் களையும் ஒண்ணா நட்பா இருக்க சொன்னாரு
இதைக்கேட்ட அந்த மூணு பேரும் இத்தனை நாளா தனி தனியா இருந்தத
நினைச்சு வறுத்த பட்டாங்க
பழமொழி : ஒற்றுமையே பலமாம்