ஒரு மரத்தடியில ஒரு ஆமை ஓய்வெடுத்துட்டு இருந்துச்சு ,அந்த மரத்து மேல ஒரு குருவி கூடு கட்டுறத பாத்துச்சு
அந்த குருவியை பாத்து “ஏ குருவி என்ன பன்றன்னு” கேட்டுச்சு அந்த ஆமை
கூடிய விரைவுல எனக்கு குட்டி குருவி வரபோது அதனால தனியா கூடு கட்டறேன்னு சொல்லுச்சு
அந்த கூட்ட பாத்த ஆமைக்கு சிரிப்பு வந்துச்சு
பாதுகாப்பான கூடு கட்டம இப்படி குச்சி இலைய வச்சு கூடு கற்றியே ,என் வீட்ட பார் ,பலமான என்னோட ஓட்ட பார்
எவ்வளவு பாதுகாப்பா இருக்கு இது மாதிரி உனக்கு வீடு வேணும்னு தோணலயா அப்படினு கேட்டுச்சு
ஆமையோட ஆணவ பேச்ச கேட்ட குருவி ,என் வீடு பலர் வந்து போற வீடு ,என் உறவினர்கள் ,என் நண்பர்கள் பல பேரு உள்ள வரலாம்
ஆனா உன்னோட வீட்டுல யாருமே வரமுடியாது ,என்னோட வீடுதான் சிறந்த வீடுன்னு சொல்லுச்சு
இத கேட்ட ஆமைக்கு ஒரே அசிங்கமா போச்சு
நீதி: Better a crowded hut than a lonely mansion
தனிமையான மாளிகையை விட நெரிசலான குடிசை பெரியது