The Wild Boar & the Fox – காட்டு பன்றியும் நரியும் :- ஒரு காட்டு பகுதியில காட்டு பன்றி வாழ்ந்துகிட்டு இருக்கு
அது ஒருநாள் ஒரு பெரிய காட்டயில தன்னோட கொம்ப தேச்சி கூர்மையாக்கிகிட்டு இருந்துச்சு
அத பார்த்த நரி பன்றியாரே பன்றியாரே ஏன் இப்படி உங்க கொம்பா கூர்மையாக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டுச்சு
அதுக்கு அந்த காட்டு பன்னி சொல்லுச்சு , ஒருவேளை எதாவது ஆபத்து வந்துச்சுனா என்னோட கொம்பு கூர்மையா இருந்துச்சுன்னா நான் தப்பிச்சுடலாமேன்னு சொல்லுச்சு
அதுக்கு அந்த நரி சொல்லுச்சு இப்ப நீங்க என்ன ஆபத்துலயா இருக்கீங்க எதுக்கு எப்படி நேரத்தை வீணடிக்கிறீங்கன்னு கேட்டுச்சு
அதுக்கு அந்த காட்டு பன்னி சொல்லுச்சு இப்ப எனக்கு எதுவும் ஆபத்து இல்ல ,ஆனா எனக்கு ஆபத்து வரும்போது கூர்மையான கொம்பு வேணும்னா அப்ப அத தீட்ட யாருக்கும் நேரம் கிடைக்காதுனு சொல்லுச்சு
நீதி : போருக்கான ஆயத்தமே அமைதிக்கான சிறந்த முன்னெடுப்பு