The Heron – கொக்கின் கதை

The Heron – கொக்கின் கதை:-ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு

அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சு

அப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுச்சு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய மீன் அதோட காலுக்கு அடியில வந்துச்சு

ஆனா அத பிடிக்காம அடுத்த பெரிய மீனுக்காக காத்துகிட்டு இருந்துச்சு

தொடர்ந்து காத்துகிட்டு இருந்த கொக்கு சாயந்திரம் வரைக்கு பெரிய மீனுக்காக காத்துக்கிட்டே இருந்துச்சு

சூரியன் மறைஞ்சதும் எல்லா மீனும் ஆத்துக்கு அடி பகுதிக்கு போய்டுச்சு,கடைசியா பசியில இருந்த கொக்கு அங்க இருந்த ஒரு நத்தய சாப்பிட்டு திருப்தி பட்டுக்கிடுச்சு

நீதி :- நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கிடனும் இல்லைனா சுமாரான முடிவுகளை நல்ல வாய்ப்புன்னு சொல்லி திருப்தி பட்டுக்கிட வேண்டியதுதான்