The Vain Jackdaw & his Borrowed Feathers – கடன் வாங்கிய இறகுகள் :- ஒரு காட்டு பகுதியில ஒரு மைனா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அது ஒருநாள் அரண்மனை தோட்டத்துக்கு போச்சு ,அங்க அழகான மயில்கள் நடனமாடுறத பார்த்துச்சு
உடனே மயில்களுக்கு இருக்குற மாதிரியே தனக்கும் இறகுகள் இருந்தா நல்லா இருக்குமேன்னு பொறாமை பட்டுச்சு

அதனால தோட்டத்துல கீழ கிடந்த மயிலிறகுகளை எடுத்து தன்னோட றெக்கையில சொருகிகிடுச்சு

தன்னோட அழகு கூடுனதா நினைச்ச மைனா அங்குட்டும் இங்குட்டும் நடக்க ஆரம்பிச்சுச்சு
அப்ப அங்க வந்த பூன அந்த மைனாவ தொரத்த ஆரம்பிச்சுச்சு

அத பார்த்த மைனா வேகமா பறக்க முயற்சி செஞ்சுச்சு ,ஆனா நிறய மயிலோட இறகுகள சொருகி இருந்ததால அதனால பறக்க முடியல
அதனால வேகமா ஓடி தப்பிச்சிட பார்த்துச்சு ,ஆனா அதுக்குள்ள அந்த பூன அந்த மைனாவ பிடிச்சிடுச்சு

அடுத்தவங்கள பார்த்து பொறாமை பட்ட மைனா அங்கேயே பூனைக்கு இரையா மாறிடுச்சு