The Two Goats – இரண்டு ஆடுகள்:ஒரு காட்டுப்பகுதியில் ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துக்கு மேல ஒரு சின்ன பாலம் இருந்துச்சு
காட்டு மிருகங்கள் ஆத்த கடக்க அந்த சின்ன பலத்த தான் பயன்படுத்துச்சுங்க
அந்த பாலம் சின்னதா இருந்ததால ஒரு நேரத்துல ஒரு மிருகம் மட்டுமே அந்த பாலத்தை கடக்க முடிஞ்சது
ஒருநாள் ஒரு ஆடு அந்த பாலத்தை கடக்க ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் அந்த ஆடு பார்த்தது எதிர் திசையிலே இருந்து இன்னொரு ஆடு அந்த பலத்தை கடக்க வந்துகிட்டு இருக்குறத
இருந்தாலும் அந்த ஆடு தொடர்ந்து பாலத்துல நடந்துச்சு
அந்த ரெண்டு ஆடுகளும் தங்களோட திமிருனாள அடுத்த ஆட்டுக்கு வழிவிடாம தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சுச்சுங்க
பலத்தோட நடுவுல சந்திச்சிக்கிட்ட ரெண்டு ஆடும் ரொம்ப கோபப்பட்டுச்சுங்க
தங்கைதான் பெரிய ஆளுன்னு நினைப்பு வச்சிருந்த ஆடுகள் ரெண்டும் சண்டை போட ஆரம்பிச்சுச்சுங்க
அப்படி ரெண்டு ஆடும் சண்ட போடுறப்ப அதுங்களோட கொம்பு ரெண்டும் மாட்டிக்கிச்சு
அந்த கொம்ப விளக்க ரெண்டும் முயற்சி செய்யும்போது தொபார்னு தண்ணிக்குள்ள விழுந்துடுச்சுங்க அந்த ரெண்டு ஆடுகளும்
ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்காத ஆடுகள் ரெண்டும் தண்ணியில விழுந்து இழுத்துட்டு போயிடுச்சுங்க
நீதி : வீண் பிடிவாதம் விரயமாகும்