The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும்

The Cock & the Fox – சேவலும் பொல்லாத நரியும் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல ஒரு கோழி பண்ணை இருந்துச்சு

அந்த கோழி பண்ணையில நிறைய கோழிகளும் சேவல்களும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அதுங்க எப்பவும் அந்த பண்ணையில இருக்குற தோட்டத்துல இறை தேடி கொத்தி திங்கும்

அந்த பண்ணை காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குறதால நிறய காட்டு மிருகங்கள் அங்க வந்து கோழிகளை தின்கிறது வழக்கமா இருந்துச்சு

அந்த காட்டு மிருகங்கள் கிட்ட இருந்து கோழிகளை காப்பாத்த,அந்த பண்ணையோட முதலாளி நிறய பொறிகலை வேலியோரம் வச்சிருந்தாரு

ஒருநாள் காலையில ஒரு சேவல் விடிய காலையிலேயே எழுந்திரிச்சு தோட்டத்துக்கு வந்துச்சு

அங்க ஒரு நரி அங்க இருந்த ஒரு மிருகங்கள் பொறியில மாட்டி கிடந்ததை பார்த்துச்சு

சேவலை பார்த்த அந்த நரி சொல்லுச்சு சேவலே சேவலே நான் என்னோட நண்பர் வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன் ,தெரியாம இந்த பொறியில சிக்கிக்கிட்டேன் தயவு செஞ்சு என்ன காப்பாத்துங்கனு சொல்லுச்சு

ஆனா புத்திசாலியான சேவல் நரியோட தந்திரத்தை தெரிஞ்சிக்கிட்டு காட்டு கூச்சல் போட்டுச்சு ,சேவலோட சத்தம் கேட்டு அந்த பண்ணையோட முதலாளி ஓடி வந்தாரு

அந்த நரிய பார்த்த முதலாளி ஒரு பெரிய கட்டாய எடுத்து ஒரே அடி அடிச்சு அந்த நரிய கொன்னுட்டாரு

நீதி : பொல்லாதவர்கள் உதவிக்கு தகுதியற்றவர்கள்