The Two Frogs Kids Story – இரண்டு தவளைகள் :- ஒரு கிராமத்துல ரெண்டு தவளை நண்பர்கள் இருந்தாங்க,அவுங்க ரெண்டு பெரும் இணைபிரியாத நண்பர்கள் ,அவுங்க எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க
ஒரு நாள் ஒரு தவளைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நாம ஏன் பட்டணத்துக்கு போயி அதோட அழக ரசிச்சிட்டு வர கூடாதுன்னு கேட்டுச்சு
அதுக்கு இன்னொரு தவளை சொல்லுச்சு அட நல்ல யோசனையா இருக்கு வா போகலாம்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் பட்டணத்துக்கு நடந்து போக ஆரம்பிச்சாங்க
தவளைகள் குட்டியா இருக்குறதால எவ்வளவு நடந்தாலும் ரொம்ப தூரம் போக முடியல ,ஆனா அந்த தவளைகள் நினைச்சது நாம ரொம்ப தூரம் நடந்து வந்துட்டோம்னு
நண்பரே நாம பட்டணத்துக்கு கிட்ட வந்துட்டோம்னு நினைக்குறேன் ,அந்த மேட்டுக்கு அப்புறம்மா பட்டணம் இருக்கும்னு நினைக்குறேன்னு சொல்லுச்சு
அப்படியா அப்ப என்னோட முதுகுல ஏறி பாரு பட்டணம் எப்படி இருக்குன்னு சொல்லி குனிஞ்சது
உடனே அந்த தவளை அதோட முதுகுல ஏறி எட்டி பாத்துச்சு ,ஆனா அதோட கண்ணுக்கு கிராமம்தான் தெரிஞ்சது ,இதுதான் பட்டணம்ன்னு அந்த தவள நினச்சுகிடுச்சு
கீழ இறங்குன அந்த தவள சொல்லுச்சு அடடா நண்பரே இந்த பட்டணம் பாக்குறதுக்கு நம்ம கிராமம் மாதிரியே இருக்கு அப்படினு சொல்லுச்சு
அதுக்கு இன்னொரு தவள நானும் பாக்குறேன்னு சொல்லி நண்பனோட முதுகுல ஏறி பாத்துச்சு
அட ஆமாம் பட்டணம் நம்ம கிராமம் மாதிரியே இருக்கு ,இனி அங்க போயி என்ன பண்ண போறோம் வா வீட்டுக்கு போவோம்னு சொல்லிட்டு திரும்பி நடக்க ஆரம்பிச்சதுங்க
தங்களோட இடத்துக்கு வந்த தவளைகள் ரெண்டும் தங்க பார்த்த பட்டணத்துல எந்த புது விஷயமும் இல்லை அது நம்ம கிராமம் மாதிரியே இருக்குன்னு சொல்லி பெருமாயிடுச்சிகிடுச்சுங்க
கிணற்று தவளைபோல்னு தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு ,கிணத்துல இருக்குற தவளைக்கு அந்த கிணறு தான் உலகம்னு நினைச்சு வாழ்த்துகிட்டே இருக்குமாம் ,அதுக்கு இந்த உலகத்துல இருக்குற எந்த விஷயமும் புரியாது புரிய வைக்கவும் முடியாதுன்னு சொல்லுவாங்க அதுமாதிரி ,இந்த தவளைகள் பட்டணம் வரை நடக்க முடியாது ,ஆனா தங்கள திருப்தி படுத்திக்க முடியும்னு.அதனால இதுமாதிரி தவளை புத்தி உடையவங்கள என்ன சொல்லியும் திருத்த முடியாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க