The Goose Girl Story – வாத்து இளவரசி

The Goose Girl Story – வாத்து இளவரசி :- ஒரு நாட்டுல ஒரு நல்ல இளவரசி இருந்தா ,அவ ரொம்ப அழகாவும் ரொம்ப நல்லவளாவும் இருந்தா

The Goose Girl Story - வாத்து இளவரசி

ஒருநாள் அவுங்க அம்மா அவள கூப்பிட்டு உனக்கு உங்க மாமாவான பக்கத்துக்கு நாட்டு அரசரோட மகனுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சிருக்கோம் ,நீ அங்க போய் கொஞ்ச காலம் இருந்துட்டு வானு சொன்னாங்க

The Goose Girl Story - வாத்து இளவரசி

இத கேட்ட அவளுக்கு மகிழ்ச்சியா இருந்தாலும் தனியா அங்க போறதுக்கு பயமா இருக்குன்னு சொன்னா அதுக்கு அவுங்க அம்மா சொன்னாங்க நம்ம வீட்டு வேலைக்கார பெண்ணையும் கூட கூட்டிட்டு போனு சொன்னாங்க

,கூடவே ஒரு மந்திர கர்ச்சீப்பயும் கொடுத்தாங்க ,உனக்கு மனசு கஷ்டமா இருக்கிறப்ப இந்த கர்சீப் உனக்கு ஆறுதல் தரும்ம்னு சொன்னாங்க

The Goose Girl Story - வாத்து இளவரசி

மறுநாள் வேலைக்கார பெண்ணோட சேந்து ஒரு குதிரை வண்டியில அரண்மனைக்கு போக ஆரம்பிச்சா அந்த நல்ல இளவரசி

The Goose Girl Story - வாத்து இளவரசி

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா அந்த வேலைக்கார பெண் சொன்னா ,நீ என்ன விட அழகா இருக்கலாம் அதுக்காக இனிமே உன்கிட்ட வேலை பார்க்க முடியாது,உன்னோட உடைகள் எல்லாத்தையும் என்கிட்டே கொடுனு சொல்லி சத்தம் போட்டா

பயந்து போன இளவரசி அந்த மந்திர கர்ச்சீப்ப பார்த்தா ,அந்த கர்ச்சீப் சொல்லுச்சு பயப்படாத இளவரசி அவ சொன்ன மாதிரி செய் கடைசியில நல்லதே நடக்கும்னு சொல்லுச்சு

உடனே இளவரசியும் வேலைக்கார பெண்ணும் தங்களோட உடைகளை மாத்திக்கிட்டாங்க

The Goose Girl Story - வாத்து இளவரசி

அரண்மனைய அடைஞ்சதும் அரசர் நேராவே வந்து அவுங்கள வரவேர்த்தாறு.இளவரசி மாதிரி இருந்த அந்த வேலைக்கார பெண் சொன்னா இதோ இவள் என்னோட வேலைக்கார பெண்ணு சொல்லி நல்ல இளவரசியை காட்டுனா

The Goose Girl Story - வாத்து இளவரசி

அவளோட அழகையும் முகத்துல இருந்த பிரகாசத்தையும் பார்த்த அரசருக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு,அப்ப அந்த வேலைக்கார பெண் சொன்னா எனக்கு இங்க இருக்கும்போது வேலைக்கு ஆட்கள் தேவை இல்ல அதனால இவளுக்கு எதாவது வேலைகொடுங்கன்னு சொன்னா

The Goose Girl Story - வாத்து இளவரசி

உடனே வாத்து மேய்க்கிற வேலை அவளுக்கு கொடுத்தாங்க ,நல்ல பெண்ணான அந்த இளவரசி ஏதும் சொல்லாம வாத்து மேய்க்கிற வேலைய ஆரம்பிச்சா ,

The Goose Girl Story - வாத்து இளவரசி

வாத்துக்கு உணவு கொடுக்குறது ,வாத்து முட்டை சேகரிக்கிறதுன்னு கடினமா உழைச்சா ,அத பார்த்த தோட்ட காரர் அவகிட்ட வந்து இவ்வளவு நல்லா வேலை பாக்குறியே இதுக்கு முன்னாடி எங்க வேலைபார்தனு கேட்டாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி

அதுக்கு அந்த இளவரசி சொன்ன நான் எங்கயும் வேலை பாத்தது கிடையாதுன்னு சொன்னா ,அவளோட நடத்தையயும் ஒழுங்கான பேச்சையும் கேட்ட அந்த தோட்டக்காரர் இவள் சாதாரண பெண்ணா இருக்க முடியாது இத உடனே அரசர்கிட்ட சொல்லணும்னு ,வேகமா அரண்மனைக்கு போயி நடந்த அரசர்கிட்ட சொன்னாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி

ஏற்கனவே அந்த பெண்ணோட விசயத்துல குழப்பத்துல இருந்த அரசர் ,நானே நேரா வந்து அவள விசாரிக்கிறேன்னு சொன்னாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி

மருநாள் தோட்டத்துக்கு வந்த அரசர் மறைஞ்சிருந்து அந்த இளவரசி செய்ற வேலை எல்லாத்தையும் பார்த்தாரு.இவ சாமானிய பெண்ணா இருக்க முடியாது ,உண்மைய எப்படி தெரிஞ்சிக்கிறதுன்னு சொல்லி யோசிச்சாறு.

The Goose Girl Story - வாத்து இளவரசி

அந்த பெண்கிட்ட வந்த அரசர் அழகிய பெண்ணே ஏன் சோகமா இருக்கன்னு கேட்டாரு ,அவருக்கு மரியாதை கொடுத்த அந்த இளவரசி மெதுவா தயங்கி நின்னா இருந்தாலும் ஒன்னும் சொல்லாம நின்னா

அதுக்கு அந்த அரசர் சொன்னாரு நீ வேணும்னா அப்புறமா அந்த வைக்கோல் கட்டுகிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லுன்னு சொன்னாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி

வைக்கோல் கட்டுகிட்ட வந்த இளவரசி தன்னோட கதையை சொன்னா ,இத மறைஞ்சிருந்து கேட்ட அரசர் உண்மைய தெரிஞ்சிகிட்டாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி

அரண்மனைக்கு வந்த அரசர் இளவரசி மாதிரி நடிச்ச வேலைக்கார பெண்ணை கூப்பிட்டு ,இளவரசியே ஒழுங்கா வேலை செய்யாத வேலைக்கார பெண்ணுக்கு என்ன தண்டன கொடுக்கலாம்னு கேட்டாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி

அதுக்கு அவ சொன்னா அவுங்க வேலைய புடிங்கிட்டு ,சிறைல அடைக்கணும்னு சொன்னா

உடனே கோபப்பட்ட அரசர் ,உண்மையான இளவரசியை மிரட்டி நீ இளவரசி மாதிரி நடிக்கிறியான்னு சொல்லி சிப்பாய கூப்பிட்டு அவள சிறைல அடைக்க சொன்னாரு ,உடனே அவளை சிப்பாய்கள் சேர்ந்து சிறைல அடிச்சாங்க

The Goose Girl Story - வாத்து இளவரசி

குடும்பத்தோட தோட்டத்துக்கு வந்த அரசர் உண்மையான இளவரசிய அரண்மனைக்கு கூட்டிட்டு போய் தன்னோட மகனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாரு

The Goose Girl Story - வாத்து இளவரசி