The Three Questions – Akbar Birbal Stories – மூன்று கேள்விகள் :அக்பரோட அரசவையில் பீர்பால் அமைச்சரா இருக்குற மாதிரி கோஜானு ஒரு மந்திரியும் இருந்தாரு
அவருக்கு பீர்பால் மேல ரொம்ப பொறாமை ,பீர்பால அக்பர் எதுக்கு எடுத்தாலும் புகழுறது பிடிக்கல
ஒருநாள் அரசவையில பீர்பாலோட திறமைய பத்தி பேசிகிட்டு இருந்தாரு அக்பர்
அப்ப எந்திரிச்ச கோஜா சொன்னாரு ,அரசே நீங்க பீர்பால ரொம்ப புகழுறீங்க ,அதுக்கு அவர் தகுதியானவர் இல்ல
வேணும்னா நான் மூணு கேள்வி கேக்குறேன் எனக்கு அவர் சரியான பதில் சொல்லிட்டா நானும் அவர் திறமைசாலினு ஒத்துகிறேன்னு சொன்னாரு
உடனே அக்பர் சொன்னாரு பீர்பால் நீங்க இதுக்கு தயாரானு கேட்டாரு
உடனே பீர்பலும் போட்டிக்கு தயார்னு சொன்னாரு
கோஜா கேட்டார்
- இந்த உலகத்துல எத்தனை நட்சத்திரங்கள் இருக்கு
- இந்த பூமியோட மைய புள்ளி எங்க இருக்கு
- இந்த உலகத்துல எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்காங்க
இத கேட்ட பீர்பால் ஒரு காவலாளிய கூப்பிட்டு ஒரு செம்மறி ஆட்ட கொண்டுவர சொன்னாரு
அந்த ஆடு வந்ததும் அரசே இந்த ஆட்டுக்கு எத்தன முடி இருக்கோ அத்தன நட்சத்திரங்கள் இருக்கு ,வேணும்னா கோஜாவ வந்து எண்ணி பாத்துக்க சொல்லுங்கன்னு சொன்னாரு
அடுத்ததா ஒரு குச்சியை எடுத்து கோஜா இருக்குற இடத்துக்கு கீழ ஒரு வட்டம் போட்டாரு
அரசே ,இந்த இடம்தான் பூமியோட மையம் ,வேணும்னா கோஜாவோட கை தடியை வச்சு அளந்து பாத்துகிட்டு சொல்லுங்கனு சொன்னாரு
அடுத்ததா ,என்ன மன்னிச்சிடுங்க அரசே இந்த கோஜா மாதிரி ஆளுங்களால என்னால சரியான ஆண் பெண் எண்ணிக்கைய சொல்ல முடியலனு சொன்னாரு
அதுக்கு விளக்கம் கேட்டாரு அரசர்
அதுக்கு பீர்பால் சொன்னாரு ,சிலசமயம் அவுங்க ஆண் மாதிரி இருந்தாலும் ,சில நேரங்கள்ல பெண் பிள்ளைகள் மாதிரி மத்தவங்க மேல பொறாம போடுறது ,கோள் சொல்லுறதுனு இருக்காங்க அதனால தான் தன்னால இத செய்ய முடியலைனும் சொன்னாரு
கோஜா ,தான் கேட்ட கேள்விக்கு புத்திசாலித்தனமா பதில் சொன்னதோட இல்லாம ,தன்னை பெண் பிள்ளைன்னு மட்டம் தட்டிட்டாரு பீர்பால்னு புரிஞ்சிகிட்டு
அரசர்கிட்டயும் ,பீர்பால் கிட்டயும் மன்னிப்பு கேட்டாரு