The Thief with a Wagon- திருடன் வீட்டில் முல்லா

 The Thief with a Wagon- திருடன் வீட்டில் முல்லா:-நம்ம முல்லா புத்திசாலி, ஊருக்குள்ள எல்லா பிரச்சனையையும் சிரிக்கச் சிரிக்க ஒரு யோசனை சொல்லி சுமூகமா தீர்த்துவிடுறவர். ஆனா, இந்தக் கதையில அவர் ஒரு பெரிய சோகத்துல சிக்கிக்கிட்டாரு .

Journey to Relatives' Village

ஒரு நாள், முல்லாவும் அவரோட மனைவியும் அவுங்க ஊருக்கு பக்கத்துல இருக்குற ஊருக்கு உறவினர்களைப் பார்க்கப் போனாங்க. அந்த ஊருல நிறைய விளையாட்டு, சாப்பாடு, சிரிப்பு – எல்லாம் இருந்துச்சு. இருந்தாலும் ராத்திரிகுள்ள வீட்டுக்கு போகலாம்னு நினைச்ச அவுங்க சயந்தரமே மெதுவா நடக்க ஆரம்பிச்சாங்க

Fun at Relatives' House, Deciding to Return

சூரியன் மெல்ல மறைய ஆரம்பிச்சு இருட்ட ஆரம்பிச்சுடுச்சு , வழி போக போக ரொம்ப நீளமா இருந்துச்சு. முல்லா மனைவிகிட்ட சொன்னாரு , கொஞ்சம் வேகமா நட, இருட்டிடுத்துச்சுனா பாதை கூட தெரியாது போலனு சொன்னாரு

Sun Setting, Long Path

வேகமா நடந்து தங்களோட தெருவுக்குள்ள திரும்புனதும் அவரோட வீட்டுக்கு முன்னாடி ஒரு பெரிய மாட்டு வண்டி நிக்குறத பார்த்தாங்க . அடடா! இது என்ன நம்ம வீட்டு வாசல் முன்னாடி ஒரு பெரிய மாட்டு வண்டி நிக்குதுனு குழம்பிப்போன முல்லாவோட மனைவி முல்லா கிட்ட ,அந்த வண்டி யாருதுனு கேட்டாங்க

Reaching Street, Seeing the Cart

அவுங்கள அமைதியா இருக்க சொல்லிட்டு ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கூர்ந்து பார்த்தாரு முல்லா ,முல்லா வீட்டுக்குள்ள இருந்து ஒரு திருடன் வெளிய வந்தான் , அவன் முல்லாவோட சாப்பாட்டு மேசை, சேர்கள், பெட்டிகள் – எல்லாத்தையும் வண்டிக்குள்ள ஏத்திக்கிட்டு இருந்தான்

Hiding Behind Tree, Watching Thief Load

அப்பத்தான் முல்லாவோட மனைவி சொன்னாங்க ,அங்க பாருங்க திருட்டுப்பய நம்ம வீட்டு பூட்ட உடைச்சி எல்லாத்தையும் வண்டியில ஏத்திக்கிட்டு இருக்கான் , வாங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரையும் எழுப்பு அவன அடிச்சி தொரத்தலாம்னு சொன்னாங்க

Mulla Watches Quietly, Thief Drives Away

ஆனா முல்லா அவுங்கள அமைதியா இருக்க சொல்லிட்டு அந்த திருடன் என்ன செய்யுறான்னு பார்த்தாரு ,எல்லா பொருளையும் வண்டியில ஏத்துந அந்த திருடன் வண்டிய ஓட்டிக்கிட்டு எதிர் திசையில போனான் ,உடனே முல்லா தன்னோட மனைவி கைய புடிச்சுகிட்டு அந்த வண்டி பின்னாடியே நடந்தாரு

Following the Cart on Foot

அந்த மாட்டு வண்டி பக்கத்துல இருந்த ஊருல இருக்குற ஒரு குடிசைக்கு முன்னாடி போயி நின்னுச்சு ,உடனே முல்லா தன்னோட மனைவிகிட்ட ஒரு ரகசியம் சொன்னாரு ,அத கேட்ட முல்லாவோட மனைவிக்கு லேசா சிரிப்புதான் வந்துச்சு.

Cart Stops at Thief's Hut, Mulla Whispers Plan

எல்லா பொருளையும் வண்டியில இருந்து இறக்குனா அந்த திருடன் எல்லாத்தையும் வீட்டுக்குள்ள போய் அடுக்கி வச்சிட்டு படுத்து தூங்க ஆரம்பிச்சான் ,மறுநாள் தூக்கத்துல இருந்து எழுந்திரிச்சவனுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு ,இது என்ன என்னோட கட்டில்ல என்னோட மெத்தையில யாரோ ஒரு கிழவன் படுத்து இருக்கானேனு பார்த்தான்

Next Morning, Thief Wakes to See Mulla on Bed

மெதுவா முல்லாவ தட்டி எழுப்பி நீங்க யாரு நீங்க எதுக்கு என்வீட்டுல வந்து படுத்து இருக்கீங்கன்னு கேட்டான் ,அதுக்கு முல்லா சொன்னாரு ஐயா இது என்னோட கட்டில் நேத்து நீங்க திருடிட்டு வந்துட்டீங்க எனக்கு கட்டில்ல படுத்தான் தூக்கம் வரும் அதான் இங்க வந்து படுத்துகிட்டேன்னு சொன்னாரு

Mulla Explains It's His Bed

அப்பத்தான் சாயல் காட்டுல ஏதோ சத்தம் கேட்டதும் அங்க என்னனு போய் பார்த்தான் ,அங்க முல்லாவோட மனைவி சமைச்சிக்கிட்டு இருந்தாங்க ,நீங்க எதுக்கு என்னோட வீட்டுல வந்து சமையல் செய்யுறீங்கனு கேட்டான் அந்த திருடன்

Thief Questions Wife About Cooking

அதுக்கு முல்லாவோட மனைவி சொன்னாங்க ,இது என்னோட சட்டி ,இது என்னோட கரண்டி ,இது என்னோட அடுப்பு எல்லாத்தையும் நீங்க திருடிட்டு வந்து இங்க வச்சுக்கிட்டீங்க ,இது இங்க இருக்குறதால இனிமே இதுதான் என்னோட வீடுன்னு சொன்னாங்க

Wife Claims It's Her House Now

அடடா விவரம் தெரியாம இந்த குடும்பதுகிட்ட திருடி மாட்டி கிட்டமே ,இவுங்கள எப்படி தொரத்துறது யோசிச்சான் ,ஆனா முல்லாவும் அவரோட மனைவியும் தங்களோட சொந்த வீட்டுல என்ன எல்லாம் செய்யுவங்களோ அத எல்லாம் இங்கயே செய்ய ஆரம்பிச்சாங்க

Mulla and Wife Do Household Chores

இத பார்த்த அந்த திருடன் முல்லா கிட்ட ஐயா நான் தெரியா தனமா உங்க வீட்டுல திருடிட்டேன் ,உங்க பொருளை எல்லாம் இப்பவே கொண்டுவந்து வச்சுடறேனு சொன்னான் ,அதேமாதிரி எல்லாத்தையும் முல்லா வீட்டுல கொண்டுவந்து வச்சிட்டு எல்லாரு கிட்டயும் மன்னிப்பு கேட்டான்

Returns Furniture to Mulla's House