The Swallow & the Crow – காக்கையும் குயிலும் : ஒரு காட்டுல ஒரு காக்காவும் குயிலும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
ஒருநாள் காக்கா ஒரு மரத்து மேல உக்காந்துகிட்டு இருந்துச்சு
அப்ப அங்க வந்துச்சு குயில் , சும்மா இருந்த காக்காவ வம்பிழுக்க ஆரம்பிச்சுச்சு குயில்
காக்கையாரே ஏன் உங்க ரெக்கை எல்லாம் கருப்பா இருக்கு ,என்னோட ரெக்கைய பாருங்க எவ்வளவு கலர் கலரா இருக்குனு சொல்லுச்சு
அத கேட்ட காக்கா சொல்லுச்சு என்னோட ரெக்கை பலம் வாய்ந்தது எல்லா காலத்துக்கும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்
ஆனா நீங்க குளிர் காலத்துல வெளியவே வர மாட்டறீங்க ,ஏன்னா உங்க ரெக்கை கலர் கலரா இருந்தாலும் அது பலமானது இல்ல
குளிர கூட தாங்க முடியாத ரெக்க வச்சிகிட்டு எங்கள கோர சொல்லாதீங்கன்னு சொல்லுச்சு
மூக்குடை பட்ட குயில் அங்க இருந்து அழுதுகிட்டே பறந்து போச்சு
நீதி :கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை