The Sound of a Cloak – Mulla Story – முல்லாவின் கடிகாரம்

The Sound of a Cloak – Mulla Story – முல்லாவின் கடிகாரம் :- என்னதான் உலக புகழ் அடைஞ்சு இருந்தாலும் எல்லாரையும் போல முல்லா தன்னோட மனைவி கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாரு.

Introduction to Mulla's life and village closeness

அவரு வசிக்கிற கிராமத்துல இருந்த வீடுகள் எல்லாம் ரொம்ப கிட்டக்க கிட்டக்க இருந்ததால ஒரு வீட்டுல நடக்குறது அடுத்த வீட்டுக்கு நல்லாவே தெரியும் ,ஒரு வீட்டுல பேசுற விஷயம் அடுத்த வீட்டுக்கு கேக்குறதும் அத அவுங்க ஜாடை மடையா புறணி பேசுறதுக்கு அந்த ஊருல சகஜமாவே இருந்துச்சு

Mulla returns tired from market

ஒரு நாள் சந்தையில இருந்து வந்த முல்லா ரொம்ப சோர்வா இருந்தாரு ,வீட்டுக்கு வந்ததும் மெத்தைய எடுத்து போட்டுட்டு படுத்திக்கிட்டாரு அப்பதான் அவரு வந்தத பார்த்த முல்லாவோட மனைவிக்கு கோபம் வந்துடுச்சு ,என்ன வந்ததும் படுத்துட்டீங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு களைச்சு போன நானே இன்னும் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் நீங்க வந்ததும் படுத்துடீங்களானு கேட்டு சத்தம் போட்டாங்க

Wife shouts at Mulla for not helping

இத கேட்ட முல்லா அத கண்டுக்காத மாதிரி திரும்பி படுத்து ஓய்வு எடுக்க ஆரம்பிச்சாரு ,இத பார்த்த முல்லாவோட மனைவிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு உடனே ஒரு பெரிய மண் பனைய எடுத்து டோம்ம்னு போட்டு உடைச்சாங்க

Mulla ignores and turns over; wife breaks pot

இதுக்கு மேல படுத்து இருந்தா அடுத்த பானைய நம்ம தலையிலேதான் உடைப்பாங்கனு நினைச்ச முல்லா மெத்தைய சுருட்டி வச்சிட்டு வெளிய வந்து நடக்க ஆரம்பிச்சாரு

Mulla rolls up mattress and exits the hut

அப்ப பக்கத்து வீட்டுல வச்சிக்கிட்டு இருந்த முல்லாவோட நண்பர் வந்து என்ன ஆச்சுனு கேட்டாரு ,இல்ல சின்ன சண்டைனு சொன்னாரு முல்லா ,அதுக்கு அந்த நண்பர் கேட்டாரு எல்லையே எதோ பெரிய சத்தம் கேட்டுச்சே என்னனு ஆவலோடு கேட்டாரு

Friend approaches and asks about the issue

இத கேட்ட முல்லா அடுத்தவங்க வீட்டுல என்ன நடந்துச்சுனு புறணி பேசுற இந்த ஆள என்ன பண்ணலாம்னு யோசிச்சாறு ,இந்த ஆளுகூட சண்ட போட்டு இன்னைக்கு இருக்குற நிம்மதிய எதுக்கு குலைக்கணும்னு நினைச்ச முல்லா மேற்கொண்டு நடந்தாரு ,

Mulla dismisses it as small fight; friend curious about noise

ஆனா அந்த நண்பர் தொடர்ந்து என்ன ஆச்சு முல்லானு கேட்டுகிட்டே இருந்தாரு ,உடனே முல்லா சொன்னாரு ஒன்னும் இல்லை என்னோட மனைவி என்னோட கை கடிகாரத்தை தூக்கி போட்டாங்க அதான் அவ்வளவு பெரிய சத்தம்னு சொன்னாரு

Mulla thinks about handling the gossip

உடனே முல்லாவோட நண்பர் கேட்டாரு அது எப்படி கை கடிகாரம் கீழ விழுந்து அம்புட்டு பெரிய சத்தம் கேக்கும்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா சொன்னாரு ஓஹ் அதுவா அவ கடிகாரத்த தூக்கி போடும்போது அந்த கடிகாரத்தை நான் கையில கட்டி இருந்தேன்னு சொன்னாரு

Friend persists; Mulla explains about the wristwatch

முல்லா நகைசுவையா இப்படி சொன்னதும் அந்த நண்பருக்கு அடுத்து என்ன கேக்குறதுனே தெரியல

Friend questions the noise; Mulla's punchline revelation