The Shepherd & the Lion – சிங்கமும் ஆடு மேய்ப்பவரும் :- ஒரு பள்ளத்தாக்கு பகுதியில ஒரு ஆடு மேய்க்கிறவரு இருந்தாரு
அவரு தினமும் அந்த பள்ளத்தாக்குலத்தான் தன்னோட ஆட்டு மந்தைய மேய்ப்பாரு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டி காணாம போறது வழக்கமா இருந்துச்சு அவருக்கு
தன்னோட ஆட்டு குட்டிகளை இந்த பகுதியில வாழுற ஓநாய்தான் பிடிச்சி திங்குதுனு நினைச்சாரு
அதனால கடவுள்கிட்ட வேண்டிகிட்டாரு இன்னைக்கு அந்த ஓநாய் என்கிட்டே பிடி பட்டுச்சுனா உங்களுக்கு ஒரு ஆட்டு கிடாவ பலி கொடுக்குறேனு
அப்படி வேண்டிகிட்டே போனப்பு திரும்பி பார்த்த ஆடுமேய்க்கிறவருக்கு ஒரே அதிர்ச்சி ,அங்க ஒரு பெரிய சிங்கம் ஒரு ஆட பிடிச்சிட்டு போய்கிட்டு இருந்துச்சு
பதறிப்போன ஆடுமேய்குறவரு மண்டி போட்டு கடவுள வேண்டுனாரு ஓநாய பிடிக்க ஆட்டு கெடா பலி கொடுக்கிறதா வேண்டிகிட்டேன் ,இப்ப ஒரு மாட்டையே வேணும்னாலும் பலி கொடுக்குறேன் தயவு செஞ்சு அந்த சிங்கத்த மட்டும் இங்க இருந்து தொரத்தி விடுங்கனு வேண்டிகிட்டாரு
நீதி : கெட்ட செய்கைகளுக்கு கடவுள் உதவ மாட்டாரு