The Puzzle Prodigy-A Boy Story – அமைதியான பையன்-ஒரு கிராமத்துல ஒரு அழகான குடும்பம் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க

அந்த வீட்டுல ஒரு குட்டி பையன் இருந்தான் ,அவன் எப்பவும் சுறுசுறுப்பு இல்லாம இருந்தான்
எந்த வேலை செஞ்சாலும் ரொம்ப மெதுவாவே செஞ்சான் ,அதனால அவனோட அம்மா அப்பா அவனை நினச்சு ரொம்ப வறுத்த பட்டாங்க

ஒருநாள் அந்த பையனோட தாத்தா அந்த வீட்டுக்கு வந்தாரு
அந்த பையனோட அம்மாவும் அப்பாவும் அந்த பையன் சுறுசுறுப்பு இல்லாம இருக்கானு குறைபட்டுக்கிட்டாங்க

அந்த பையனோட தாத்தா அவன் கிட்ட ஒரு புதிர் புத்தகத்த கொடுத்தாரு ,உடனே மெதுவா அந்த புதிர் எல்லாத்தையும் மிக சரியா செஞ்சு முடிச்சான்

இத பார்த்த எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம் ,அந்த தாத்தா சொன்னாரு எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்குறது இல்ல
உங்க மகன் சுறுசுறுப்பா இல்லாம இருக்கலாம் ஆனா எல்லா விஷத்தை கூர்ந்து கவனிச்சு ,எல்லாத்தையும் சரியா செய்யுறான்

அதனால அவனை பத்தி கவல படாம ,அவனுக்கு அறிவுரை சொல்லாம அவனை திட்டாம நல்ல பாடிய வழங்கனு சொன்னாரு அவரு