The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை –ஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாரு ,அவருக்கு நிறைய பேரக்குழந்தைகள் இருந்தாங்க , ஒவ்வொரு விடுமுறைக்கும் அந்த குழந்தைகள் எல்லாரும் அவரு வீட்டுக்கு வந்திடுவாங்க
விடுமுறை முடியிற வர தாத்தா வீட்டுல தங்கி சந்தோசமா விளையாடி பொழுத கழிப்பாங்க எல்லாரும்.அதுமாதிரி ஒருநாள் விடுமுறைக்கு குழந்தைகள் எல்லாரும் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தாங்க
அப்ப தாத்தா சொன்னாரு குழந்தைகளா என்னோட கைக்கடிகாரத்த காணோம் யாராவது தேடி கொடுங்கப்பான்னு சொன்னாரு ,உடனே எல்லா குழந்தைகளும் அந்த கடிகாரத்த தேட ஆரம்பிச்சாங்க ,
எவ்வளவு தேடியும் கடிகாரத்த கண்டுபிடிக்க முடியல,அப்ப புத்திசாலியான ஒரு குழந்தை மட்டும் எல்லாரும் அமைதியா இருங்கன்னு சொல்லிட்டு உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சது
அப்படியே அமைதியா இருந்த அந்த குழந்தை டக்குனு கட்டிலுக்கு அடியில இருந்து அந்த கை கடிகாரத்த எடுத்து கொடுத்துச்சு
இத பாத்த எல்லா குழந்தைகளும் எப்படி கண்டுபிடிச்சன்னு கேட்டாங்க ,அதுக்கு அந்த குழந்தை சொல்லுச்சு ,உங்களுக்கு அமைதியின் வலிமை தெரியுமா , எப்ப எல்லாம் அமைதியா இருக்குறமோ அப்ப நமக்கு கூர்ந்து நோக்குற திறமையும் , யோசிக்கிற வலிமையும் அமையுதுன்னு தாத்தா சொல்லிருக்காரு
அதனால நாம அமைதியானதும் கைக்கடிகாரத்தோட சத்தம் என்னோட காதுக்கு கேட்டதுன்னு சொல்லுச்சு.
குழந்தைகளா எப்ப எல்லாம் நமக்கு கஷ்டமும் முடிவெடுக்க முடியாத நிலைமை வரும்போது அமைதியா நிலைமைய ஆராய்ந்தோம்னா நம்மளால சாதிக்க முடியாதது எதுவுமே இல்ல
Nalla Kadai
மிகச்சிறந்த
கதை. நன்றி.
அருமையான மேன்மையான கதை