The King’s Dream – கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை

The King’s Dream – கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை:-ஒருநாள் அக்பருக்கு ஒரு வினோதமான கனவு வந்துச்சு

The King's Dream - கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை

அந்த கனவுல அக்பரோட எல்லா பல்லும் விழுந்திடுற மாதிரியும் ஒரே ஒரு பல்லு மட்டும் நல்லா இருக்குற மாதிரியும் கனவு கண்டாரு

அந்த கனவு அவருக்கு குழப்பமா இருந்துச்சு

அவரோட அந்த கனவுக்கு அர்த்தம் புரியவே இல்ல ,அதனால மறுநாள் அரசவைக்கு வந்து அங்க இருக்குற ஜோதிடர்கள் கிட்ட அந்த கனவ பத்தி சொல்லி அதுக்கு அர்த்தம் கேட்டாரு

ஜோதிடர்கள் எல்லாரும் தங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க

The King's Dream - கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை

அவுங்க சொன்னாங்க அரசே உங்களுக்கு முன்னாடி உங்க சொந்த காரங்க எல்லாரும் செத்து போய்டுவாங்கன்னு சொன்னாங்க

இத கேட்ட அரசருக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு , அந்த ஜோதிடர்கள் எல்லாரையும் பரிசு கொடுக்காம திருப்பி அனுப்பிச்சிட்டாரு

நடந்த கேட்ட பீர்பால் அதுக்கு அப்புறமா வந்து அரசர்கிட்ட

The King's Dream - கனவில் பல் -அக்பர் பீர்பால் கதை

அரசே நீங்க பல காலம் உறுதியோட உங்க சொந்த காரங்களவிட ரொம்ப நாள் வாழ்விங்கனு சொன்னாரு

இத கேட்ட அக்பர் லேசா சிரிச்சாரு ,பீர்பால் அவர்களே ,அந்த ஜோதிடர்கள் கணிச்சு சொன்னத தான் திருப்பி சொல்றிங்க

ஆனா உங்க வார்த்தைகள் ரொம்ப தெளிவா இருந்துச்சு ,எப்பவும் நல்லத பேசுற கேக்குறது ரொம்ப நல்லதுன்னு நான் நம்புறேன்

அதான் தவறான வார்த்தைகள சொன்ன அந்த ஜோதிடர்களுக்கு பரிசு கொடுக்கலனு சொன்னாரு

ஆனா எந்த ஒரு விஷயத்தையும் நல்லபடியா சொல்லுற உங்க வழிமுறைதான் சரினு சொல்லி பீர்பால பாராட்டுனாரு