The King of Birds – பறவைகளின் அரசன் :- ஒரு முறை காட்டுக்குள்ள ஒரு பிரச்னை வந்துச்சு

அங்க இருக்குற மிருகங்களுக்கு ராஜாவா சிங்கம் இருக்குறமாரி பறவைகளுக்கு யாரு ராஜனு ஒரு கேள்வி வந்துச்சு
அதனால எல்லா பறவைகளும் ஒன்னு கூடி தங்களுக்கு ஒரு ராஜாவ தேர்ந்தெடுக்க முடிவு பண்ணுச்சுங்க
ஆனா ராஜாவ எப்படி தேர்ந்தெடுக்குறதுன்னு அதுங்களுக்கு ஒரே குழப்பம்
அப்பா வான்கோழி சொல்லுச்சு எந்த பரவ ரொம்ப பெருசா இருக்குதோ அந்த பறவைய ராஜாவா அறிவிக்கலாம்னு சொல்லுச்சு
அத கேட்ட மைனா பறவைக்கு அழகே உயரமா பறக்குறதுதான் அதனால யார் அதிக உயரத்துல பறக்குறாங்களோ அவுங்க தான் ராஜானு சொல்லுச்சு
உடனே கழுகு சொல்லுச்சு இங்க இருக்குறதுலயே நான் தான் ரொம்ப உயரத்துல பறக்குறவன் அதனால என்ன ராஜாவா அறிவிங்கன்னு சொல்லுச்சு
அதுக்கு சிட்டு குருவி சொல்லுச்சு அதெல்லாம் முடியாது போட்டி வச்சாத்தான் யாரு பலசாலின்னு தெரியும் அதனால பறக்கிற போட்டி வைங்கன்னு சொல்லுச்சு

உடனே எல்லா பறவைகளும் பறக்க ஆரம்பிச்சதுங்க கழுகு ரொம்ப உயரத்துல பயந்துகிட்டே சொல்லுச்சு பாத்திங்களா நான்தான் உயரத்துல பறக்குறேனு சொல்லுச்சு

அப்பதான் கழுகோட ரேகைக்குள்ள இருந்து ஒளிஞ்சு இருந்த சிட்டுக்குருவி கழுகுக்கு மேல தாவி பறந்துச்சு
உங்களுக்கு மேல நான் பறந்ததால நான் தான் ராஜான்னு சொல்லுச்சு

சிட்டுக்குருவியோட துரித போக்க புரிஞ்சுகிட்ட எல்லா பறவைகளும் அதையே ராஜாவா அறிவிச்சதுங்க