The Gnat & the Bull – காளையும் கொசுவும்:-ஒரு ஊருல ஒரு கொசு ரொம்ப பசியோட இருந்துச்சு

அதனால பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு போயி யாராவது கடிச்சி ரெத்தம் குடிக்கலாம்னு முடிவு பண்ணுச்சு
உடனே மெதுவா பறந்து பக்கத்து கிராமத்துக்கு போச்சு ,அப்படி போகுறப்ப அதுக்கு ரொம்ப சோர்வா போயிடுச்சு
அதனால அங்க இருந்த ஒரு காளை மாட்டோட கொம்புல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துச்சு அந்த கொசு
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா கிளம்ப ஆரம்பிச்சுச்சு அந்த கொசு
அப்பத்தான் இவ்வளவு நேரம் நான் ரெஸ்ட் எடுக்க பயன்படுத்தின கொம்புக்கு நன்றி சொல்லுச்சு அந்த காளைக்கு
அப்பதான் அந்த காளை சொல்லுச்சு எனக்கு எல்லாம் ஒண்ணுதான் ,நீ இருப்பது கூட எனக்கு தெரியாது ,நீ உன் வேலைய மட்டும் பாருன்னு சொல்லுச்சு
நீதி: நாம எப்பவும் நம்மதான் பெரிய ஆளுன்னு நம்பிகிட்டு இருக்கோம் ,அது எப்பவும் சரி கிடையாது