The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும் : ஒரு நாள் ராத்திரி நிலா வெளிச்சத்துல சில காட்டு கோழிகள் ஒரு மரத்து மேல உக்காந்து இருந்துச்சுங்க

அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு , அந்த நரிய பார்த்ததும் அந்த கோழிகளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு
அடடா நாம கீழ விழுந்தம்னா இந்த நரி நம்மள பிடிச்சி திண்ணுடுமேனு ரொம்ப பயந்துச்சுங்க அந்த காட்டு கோழிங்க

அப்ப அந்த நரி அந்த மரத்து மேல ஏற முயற்சி செஞ்சுச்சு ,அத பார்த்த காட்டு கோழிகளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு
தந்திரகார நரி கீழ படுத்துகிட்டு செத்தது மாதிரி நடிச்சிச்சு ,ஆனா அதோட வால் மட்டும் அசையிரத பார்த்துச்சுங்க அந்த கோழிங்க
உடனே ரொம்ப பயம் வந்திடுச்சு அந்த கோழிகளுக்கு

அப்ப ரொம்ப பயந்துபோன கோழி நடுக்கத்துல கீழ விழுந்துச்சு
உடனே அந்த நரி அத பிடிச்சி தின்னுடுச்சு ,அத பார்த்த மத்த கோழிகளுக்கும் ரொம்ப பயம் வந்து அதுங்களோட நிலை தடுமாறுச்சு

ஒவ்வொரு கோழியா பயத்துல கீழ விழ எல்லா கோழியையும் சாப்பிட்டுடுச்சு அந்த நரி
நீதி: ஆபத்தில் அதிக கவனம் செலுத்துவது நம்மை அதற்கு பலியாக வைக்கலாம்.
நீதி 2: பதறாத காரியம் சிதறாது
பழமொழி : பதறாத காரியம் சிதறாரு
திருக்குறள் :
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு