The farmer And His Lazy Sons – விவசாயியும் நான்கு சோம்பேறி மகன்களும் :- ஒரு கிராமத்துல ஒரு பெரியவர் வாழ்த்துகிட்டு வந்தாரு அவருக்கு நான்கு மகன்கள் இருந்தாங்க
அவுங்க நாலு பேருமே ரொம்ப சோம்பேறியவே இருந்தாங்க
இத பாத்த அந்த முதியவர் அவுங்கள கூப்பிட்டு ஆலோசனை சொன்னாரு , ஆனா சோம்பேறியான அந்த நாலு மகன்களும் அவர் பேச்சை கேக்காமலேயே இருந்தாங்க
ஒருநாள் அவுங்க நாலு பேத்தியும் கூப்பிட்டு ஒரு தங்க காச கொடுத்தாரு
இதுமாதிரி ஆயிரம் தங்க காசுகள் நம்ம நிலத்துல இருக்குன்னு சொன்னாரு
உடனே ஆர்வமான அந்த நாலு புதல்வர்களும் அந்த புதையல் எங்க இருக்குன்னு கேட்டாங்க
அதுக்கு அந்த முதியவர் எனக்கு ஞாபக சக்தி குறைஞ்சிடுச்சு அது எங்க இருக்குன்னு தெரியல ஆனா அது நம்ம நிலத்துலதான் இருக்குன்னு சொன்னாரு
உடனே அவுங்க நாலு பெரும் அந்த இடத்தை தோண்ட ஆரம்பிச்சாங்க
சில காலங்களுக்கு அப்புறமா அந்த முதியவர் இயற்கை எய்தினார்
அந்த நாலு மகன்களும் விடா விடாமுயற்சியுடன் அந்த நிலத்தை தோண்டி புதையல் தேடிக்கிட்டே இருந்தாங்க
ஆனா அவங்களுக்கு புதையல் கிடைக்கல
கடைசியா ஒரு இடத்தில் மட்டும் நிலம் வேற மாதிரி இருந்துச்சு
அந்த இடத்தை தோண்றப்ப அங்க இருந்து நிறைய தண்ணி வர ஆரம்பித்தது
அந்த பக்கமா போனா சில முதியவர்கள் அடடா உங்கள் நிலம் விவசாயம் பண்றதுக்கு நல்லபடியா உழுது தயாரா இருக்கு
உங்களுக்கு தேவையான தண்ணீரும் இப்ப கிடைக்குது, நீங்க இப்ப விவசாயம் பண்ணினா இந்த ஊரிலேயே பணக்காரனா மாறிவிடுவீர்கள் அப்படின்னு சொன்னாங்க.
இதை கேட்ட அந்த நாலு மகன்களும் அப்பா கொடுத்த ஒரு தங்க காச வித்து காய்கறி விதைகள் வாங்கி அந்த நிலத்துல பயிரிட்டாங்க
இரண்டே மாசத்துல புதுசா காய்கறிகள் விவசாயம் பண்ணி விக்கிற அளவுக்கு வந்தது, அந்த காய்கறிகளை அறுவடை செஞ்சு பக்கத்துல இருக்கிற சந்தையில் கொண்டு போய் வித்தாங்க
அவங்களுக்கு நிறைய வருமானம் வர ஆரம்பிச்சது அப்பதான் உங்களுக்கு தெரிஞ்சது புதையல் ஒன்னுமே இல்ல சோம்பேரித்தனமா இருந்த நம்மள திருத்த தான் அப்பா இப்படி ஒரு பொய் சொல்லி இருக்காரு
நாம உழைப்பை போட்டா நமக்கு புதையல் தேவையில்லை
நாம சம்பாதிக்கிற சம்பாத்தியமே நமக்கு போதும் அப்படிற உண்மையை அவங்க தெரிஞ்சிட்டாங்க இடைவிடாது உழைத்து அந்த ஊரிலேயே பணக்காரங்க ஆனாங்க