Tamil story for kids with moral – அனுபவம்

Tamil story for kids with moral – அனுபவம் : –ஒரு தொழிற்சாலையில ஒருநாள் ஒரு பிரச்னை வந்துச்சு

Tamil story for kids with moral

அங்க இருக்குற மிக பெரிய இயந்திரம் பழுதாகிடுச்சு

நிறைய மெக்கானிக் வந்து அந்த இயந்திரத்த சரி பண்ண முயற்சி செஞ்சும் அந்த இயந்திரம் நல்ல படியா வேலை செய்ய வைக்க முடியல

ரொம்ப கோபமான முதலாளி அந்த இயந்திரத்த பழுது பாக்க அந்த ஊருலயே மிக திறமையான மெக்கானிக்க கூப்பிட்டு வந்தாரு

வந்தவரு இயந்திரத்த நல்லா சோதிச்சு பாத்துட்டு ஒரே ஒரு திருகாணிய மட்டும் திருப்பி அந்த இயந்திரத்த வேலை செய்ய வச்சாரு

Tamil story for kids with moral

சந்தோசமான முதலாளி இந்த வேலைக்கு எவ்வளவு செலுவுன்னு கேட்டாரு

அதுக்கு அந்த மெக்கானிக் 20000 ரூபாய்க்கு பில் கொடுத்தாரு

என்ன இந்த சின்ன வேலைக்கு இவ்வளவு ரூபாயானு யோசிச்ச முதலாளி எனக்கு தெளிவான பில் கொடுங்கன்னு கேட்டாரு

அதுக்கு அந்த மெக்கானிக் திருகனியோட விலை 10 ரூபாய் , அது எந்த திருகாணி , அத திருகுனா வேலைசெய்யணும்னு கண்டுபிடிக்கிறதுக்கு 19990 ரூபாய்னு எழுதி கொடுத்தாரு