இசை – அக்பர் பீர்பால் கதை -The Divine Music – Akbar Birbal Story in Tamil:- அக்பர் ஒருநாள் தன்னோட ஆஸ்தான இசை வித்வானான தான் சேனோட பட்ட அக்பரோட சேந்து கேட்டுகிட்டு இருந்தாரு

அப்ப நீங்கதான் இந்த உலகத்துலயே மிக திறமையான பாடகர்னு சொன்னாரு அக்பர் ,அதுக்கு பீர்பால் சொன்னாரு இவரோட குருவான ஹரிதாஸ் இவர விட மிக திறமைசாலி ,அவரோட பாட்ட கேட்டா நீங்க அசந்து போயிடுவீங்கனும் சொன்னாரு

இத கேட்ட அக்பருக்கு அவரோட பாட்ட கேக்க ரொம்ப ஆசையா இருந்துச்சு

மறுநாள் அரசரும் ,தான் சேனும்,பீர்பாலும் ஹரிதாஸோட வீட்டுக்கு போனாங்க

அரசர் ஹரிதாஸ் கிட்ட எனக்கு உங்க பாட்ட கேக்க ரொம்ப ஆவலா இருக்குனு சொன்னாரு

தனக்காக ஒரு பாட்டு பாட சொல்லி கேட்டாரு அக்பர்
ஆனா இறைவனோட கட்டளைக்காக மட்டுமே பாட்டு பாடுறது என்னோட வழக்கம் என்னால உங்களுக்கு பாட்டு பாடி காட்ட முடியாதுனு சொல்லிட்டாரு
உடனே கோபமான அரசர் வெளியேவந்துட்டாரு ,
இத பாத்த பீர்பாலுக்கு ஒரு யோசனை தோனுச்சு ,தான் சேன் அவர்களே நீங்க இப்ப ஒரு பாட்ட தப்பா பாடுங்க

உங்க குருவான ஹரிதாஸ் அந்த பாட்ட திருப்பி பாடுவார் ,நாம்மலோட அரசரும் அந்த பாட்ட கேப்பாருனு சொன்னாரு

உடனே தான் சேனும் தப்பு தப்பு பாட்டு பாடுனாரு ,இத கேட்ட குரு அந்த பட்ட திருத்தமா பாட ஆரம்பிச்சாரு ,இத கேட்ட அரசருக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ,

கடவுளுக்கு மட்டும் படுவேன்னு குரு சொன்னதுக்கு பிறகும் ,தன்னோட புத்தி கூர்மையாள அவர பாட வச்ச பீர்பால புகழ்தாறு அக்பர்