The Crow and the Farmer – காக்கை நண்பன்

The Crow and the Farmer – காக்கை நண்பன் :- ஒரு விவசாயி தன்னோட நிலத்துல நெல் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாரு

அவரோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற மரத்துல ஒரு பெரிய மரம் இருந்துச்சு ,அதுல நிறய காக்காய் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

எப்பவும் தன்னோட வீட்ட சுத்தி சத்தம் போட்டுக்கிட்டே இருந்த காக்கா எல்லாத்தையும் அந்த விவசாயிக்கு பிடிக்கவே பிடிக்காது

இருந்தாலும் தன்னோட வீட்டுல இருந்த பழைய சாப்பாடு ,தனியங்கள்னு காக்கைகளுக்கு சாப்பிட கொடுப்பாரு

ஒருநாள் அவரோட விவசாய நிலத்துக்கு நிறய வெட்டு கிளிகள் வந்துச்சுங்க

அதுங்க நிறய தானியங்கள் மண்ணுமில்லாம பயிர்களையே தின்னு தீர்க்க ஆரம்பிச்சுச்சுங்க ,அத பார்த்த விவசாயி ரொம்ப வருத்தப்பட்டாரு

எவ்வளவு கஷ்டப்பட்டாவது இந்த வெட்டுக்கிளிகளை தொரத்தணும்னு முயற்சி செஞ்சாரு ,ஆனா நிறைய வெட்டுக்கிளிகள் இருந்ததால அவரால எல்லாத்தையும் விரட்ட முடியல

ரொம்ப வருத்தப்பட்ட விவசாயி ஒண்ணுமே செய்ய முடியாம வருத்தத்துல அங்கேயே உக்காந்து தன்னோட நெல் பயிர்களை வெட்டு கிளிகள் தின்னு நாசமாக்குறத பாத்துகிட்டு இருந்தாரு

வருத்தமா உக்காந்து இருந்த விவசாயிய பார்த்த காகங்கள் உடனே பறந்து வெந்து வெட்டுக்கிளிகளை பிடிச்சு திங்க ஆரம்பிச்சுங்க

இத பார்த்த விவசாயிக்கு ரொம்ப சந்தோசம் வந்துடுச்சு ,கொஞ்ச கொஞ்சமா எல்லா வெட்டு கிளிகளையும் பிடிச்சி தின்ன காகங்கள் எல்லாம் பார்த்த விவசாயி

அடடா இத்தனை நாள் நமக்கு தொந்தரவுனு நினைச்சுகிட்டு இருந்த காக்கா எல்லாம் தான் கொடுத்த சின்ன உணவுக்காக ,இப்ப நமக்கு உதவி செஞ்சு நம்மள காப்பாத்திடுச்சேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டாரு

அன்னையில இருந்து காக்காவோட சேர்ந்து தன்னோட வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சாரு அவரு