The Clever Merchants – உளுந்தம் பருப்பு-Akbar Birbal Stories in Tamil:-அக்பர் ஒருநாள் கேட்டாரு ,இந்த நாட்டுல யார் அதிக புத்திசாலிகள்ன்னு
உடனே பீர்பால் சொன்னாரு அரசே இந்த வணிகர்கள் தான் ரொம்ப புத்திசாலிங்கனு சொன்னாரு
அப்ப அவுங்களோட புத்திசாலி தனத்தை நான் நேர்ல பாக்கணும்னு சொன்னாரு ,அப்ப உளுந்தம் பருப்ப கண்டுபிடிக்கிற போட்டி ஒன்னு இருக்கு அத செஞ்சு பார்ப்போமான்னு கேட்டாரு
அக்பரும் சரினு சொன்னாரு
உடனே அந்த நகரத்துல இருக்குற எல்லா வணிகர்களையும் வரச்சொல்லு ஆணையிட்டாரு பீர்பால்
அவுங்க எல்லாரும் வந்ததும் ஒரு குடத்தை எடுத்துட்டு வந்து காமிச்சாரு
அந்த குடத்தோட வாய் துணியால கட்டியிருந்துச்சு ,ஒருத்தரோட கை மட்டும் உள்ள போற அளவுக்கு இருந்துச்சு ஆனா யாராலயும் உள்ள இருக்குறத பார்க்க முடியல
பீர்பால் சொன்னாரு வணிகர்களே இந்த குடத்துக்குள்ள ஒரு தானியம் இருக்கு ,நீங்க எல்லாரும் இதுக்குள்ள கைய விட்டு அந்த தானியத்தை கண்டுபிடிங்கனு சொன்னாரு
அது மாதிரியே எல்லாரும் கைய விட்டு அந்த தானியத்தை தடவி பார்த்தாங்க ,ஆனா எல்லாரும் ஒண்ணுமே சொல்லாம இருந்தாங்க
யாராவது பதில் சொல்லுங்கன்னு அவளோட அரசர் கேட்டாரு
ஆனா அந்த வணிகர்களுக்கு சின்ன சந்தேகம் வந்துச்சு ,அதனால அவங்க எல்லாரும் ஒண்ணா கூடி ஒரு ஆலோசனை செஞ்சாங்க
கடைசியா ஒவ்வொருத்தரா பதில் சொல்ல ஆரம்பிச்சாங்க ,இது துவரம்பருக்கு ,கடலை பருப்பு ,நிலக்கடலை பருப்பு ,அரிசினு ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு தப்பு தப்பா சொன்னாங்க
ரொம்ப ஆவலா இருந்த அக்பர் ஒருத்தர்கூட உளுந்தம்பருப்புனு சொல்லமாற்றங்களேனு கேட்டாரு
உடனே அந்த வணிகர்களோட தலைவர் சொன்னாரு அரசே நீங்க சொன்ன மாதிரி அது உளுந்தம் பருப்புதாணு சொன்னாரு
அப்பத்தான் அவுங்க புத்திசாலித்தனமா எல்லாரும் தப்பா சொல்லி ,அரசர் வாயாலேயே உன்மையை வரவச்சுட்டாங்கனு புரிஞ்சது