The Cabbage and the Cooking-Pot – Mulla Story – முல்லா முட்டை கோஸ்

The Cabbage and the Cooking-Pot – Mulla Story – முல்லா முட்டை கோஸ் :- முல்லா புத்திசாலித்தனமான கதைகள் நிறய இருந்தாலும் முல்லா எல்லா பிரச்சனைகளையும் நகைச்சுவையா தீர்த்து வைக்கிறது தான் அவரோட புகழுக்கு காரணமா இருந்துச்சு

Introduction to Mulla's Fame

ஒருநாள் முல்லாவுக்கு ரொம்ப போர் அடிச்சிச்சு ,உடனே கடை வீதிக்கு போயி நண்பர்கள் யாராவது கிடைச்சாங்கன்னா கொஞ்ச நேரம் பேசிட்டு வரலாம்னு நினைச்சாரு ,உடனே மெதுவா நடந்து போன முல்லா ஒரு டீ கடையில மூணு நண்பர்கள் உக்காந்து டீ குடிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்குறத பார்த்தாரு

 Mulla Feels Bored and Heads to the Street

உடனே அவரும் அதே டீ கடைக்கு போயி ஒரு டீ வாங்கிகிட்டு பக்கத்துல இருக்குற கயித்து கட்டில்ல உக்காந்து டீ குடிக்க ஆரம்பிச்சாரு , முல்லாவ தவிர அங்க உக்காந்து பேசிகிட்டு இருந்த மூணு பேரும் விவசாயிங்க ,அவுங்க தங்களோட விவசாயத்த பத்தியும் அவுங்க செஞ்ச சாதனைகளை பத்தியும் பேசிகிட்டு இருந்தாங்க

Mulla Joins the Tea Shop and Listens to the Farmers

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அவுங்க பேச்சு சண்டையா மாறுச்சு ,அதுல ஒரு விவசாயி சொன்னாரு ஒரு தடவ என்னோட விவசாய நிலத்துல ஒரு கழுதை அளவுக்கு பெருசா ஒரு பூசணிக்கா வளர்த்தேன் ,என்னோட திறம உங்க யாருகிட்டயும் இல்லைனு சொன்னாரு

The First Farmer Brags About the Donkey-Sized Pumpkin

உடனே பக்கத்துல இருந்த இன்னொரு விவசாயி இது என்ன பிரமாதம் என்னோட தோட்டத்துல என் உயரத்துக்கு ஒரு கேரட் வளர்த்தேன் ,அந்த சாதனைக்கு முன்னாடி உன்னோட சாதனைகள் எல்லாம் ரொம்ப சாதாரம்னு சொன்னாரு

The Second Farmer Brags About the Man-Sized Carrot

இத கேட்ட மூணாவது விவசாயி சொன்னாரு நான் ஒரு தடவ ஒரு கன்னுகுட்டி அளவுக்கு பெருசா முட்டை கோஸ் வளர்த்தேன் ,அத பார்த்த பக்கத்து ஊர் கிராம விவசாயிங்க கூட என்ன பார்க்க வந்தாங்க ,என்னோட திறமைக்கு முன்னாடி நீங்க எல்லாம் ரொம்ப சாதாரண ஆளுங்கன்னு சொன்னாரு

The Third Farmer Brags About the Coconut-Sized Cabbage

இந்த வெட்டி பேச்சு முல்லாவுக்கு எரிச்சலா இருந்துச்சு உடனே அந்த பேச்ச முடிவுக்கு கொண்டு வர நினைச்சாரு ,உடனே நான் நேத்து பட்டணத்துல இருக்குற சந்தைக்கு போயி ஒரு படகு அளவுக்கு பெரிய வடை சட்டி வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொன்னாரு

Mulla Interrupts with His Boat-Sized Frying Pan Story

இத கேட்ட அந்த மூணு விவசாயிகளும் சிரிச்சாங்க ,என்னது படகு அளவுக்கு வடை சட்டியா ,அது எதுக்கு உங்களுக்குனு கேட்டு சிரிச்சாங்க ,அப்பத்தான் முல்லா சொன்னான் பின்ன கழுதை அளவு பூசணிக்காயும் ,ஆள் உயர கேரட்டும் , கன்னுகுட்டி அளவு முட்டைக்கோசும் சமைக்குறதுக்கு அவ்வளவு பெரிய வடை சட்டி தேவபடும்லனு சொன்னாரு

Mulla Delivers the Punchline, and the Farmers Realize

அத கேட்டதும்தான் அந்த மூணு விவசாயிகளும் வெட்டி பேச்சு பேசிகிட்டு இல்லாத கதையை பேசுறத முல்லா சுட்டி காட்டுறாருனு புரிஞ்சிகிட்டு எல்லாரும் அவுங்க அவுங்க வேலைய பார்க்க போனாங்க