The Bullock Carts-மாட்டு வண்டிகள்-Akbar Birbal Story

The Bullock Carts-மாட்டு வண்டிகள்-Akbar Birbal Story:-அக்பரோட மனைவி பேகம் மகாராணிக்கு பீர்பாலோட இடத்தை தன்னோட தம்பியான ஷேர்கானுக்கு கொடுக்கணும்னு ரொம்ப ஆச

ஒவ்வொரு தடவ அதுக்கு அக்பர்க்கிட்ட அவர் பேசும்போதும் பீர்பால் தன்னுடைய திறமையை நிரூபிச்சி பேகத்தோட ஆசைய பொய்யாக்கிட்டே இருந்தாரு

ஒருநாள் திரும்பவும் அக்பர்க்கிட்ட இதப்பத்தி கேட்டாங்க பேகம் ,உனக்கு பீர்பாலோட அருமைய புரிய வைக்கிறேன்னு சொன்னாரு

ஒருநாள் அரண்மனை மாடியில அக்பரும் ,பேகமும் ,ஷேர்கானும் உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ,அப்ப மாட்டு வண்டி மணி சத்தம் கேட்டுச்சு

உடனே ஷேர்கான அந்த மணி எங்க கேக்குதுனு போய் பார்த்துட்டு வர சொன்னாரு

கொஞ்ச நேரம்கழிச்சி அங்க வந்த ஷேர்கான் அரசே அது மாட்டு வண்டி சத்தம்னு சொன்னாரு

மாட்டுவண்டி எங்க போகுதுனு கேட்டாரு ,அதையும் போய் பார்த்துட்டு வந்த ஷேர்கான் கிழக்கு நோக்கி போகுதுனு சொன்னாரு

எத்தனை வண்டி போகுதுனு திரும்ப கேட்டாரு ,அதுக்கு திரும்ப போய் பாத்துட்டு வந்த ஷேர்கான் நூத்துக்கு அதிகமான வண்டி போகுதுனு சொன்னாரு

திரும்பவும் அக்பர் கேட்டாரு என்ன கொண்டுபோகுது அந்த மாட்டு வண்டினு கேட்டாரு ,இந்த தடவ பொறுமை இழந்த ஷேர்கான போக வேணாம்னு சொல்லிட்டாரு அக்பர்

கொஞ்ச நாள் கழிச்சி அதேமாதிரி அக்பர் ,பீர்பால் ,ஷேர்கான்,பேகம் மகாராணி நாலு பேரும் மாடியில இருக்கிறப்ப அதே மாதிரி மாட்டு வண்டி சத்தம் கேட்டுது

உடனே பீர்பால் கிட்ட அது என்ன சத்தம்னு கேட்டாரு ,அதுக்கு பீர்பால் சொன்னாரு அது மாட்டுவண்டி சத்தம் ,100க்கும் மேல வண்டியோட எண்னிக்கை இருக்கலாம் ,இவ்வளவு மெதுவா போறதால வண்டியில நிறைய தானியங்கள் ஏத்திட்டு போகலாம் ,சத்தம் இந்த பக்கம் ஆரம்பிச்சி இந்த பக்கம் போறதால அந்த வண்டிங்க கிழக்கு பக்கம் போகலாம்னு சொன்னாரு

வரலாம் போகலாம்னு சொன்னா எப்படி சரியா சொல்லுங்கன்னு சொன்னாங்க பேகம்

உடனே நேர்ல போய் பார்த்துட்டு வர போனாரு பீர்பால் ,கொஞ்ச நேரம் கழிச்சி அங்க வந்த பீர்பால் ,அரசே நான் சொன்னமாதிரியே 100 மாட்டுவண்டில தரமான அரிசி கிழக்குநோக்கி போய்கிட்டு இருந்துச்சு ,அதோட தரத்தை பார்த்ததும் அத விலைக்கு வாங்கி நம்ம அரசு கருவூலத்துக்கு அனுப்பி வச்சிட்டேன் ,இனி அந்த உணவு பொருள் அரண்மனைக்கு பயன்படும்னு சொன்னாரு

இத கேட்ட பேகத்துக்கும் ,ஷேர்கானுக்கும் அப்பதான் சொன்ன வேலைய மட்டும் செய்றத விட ,துரிதமா வேலை செய்யிற பீர்பாலோட திறமை புரிஞ்சது

அதுக்கு அப்புறமா ஷேர்கான விட பீர்பால் 100 மடங்கு திறமையானவர்னு பேகமே சொல்ல ஆரம்பிச்சாங்க