The Bag of Coins – பாட்டியின் பணம் – Tamil Akbar Birbal Story:-ஒருமுறை அக்பரோட நாட்டுல வாழ்ந்துகிட்டு இருந்த மூதாட்டி புண்ணிய யாத்திரை கிளம்புனாங்க
அதனால தன்னோட கைல இருக்குற தங்க காசு எல்லாத்தையும் ஒரு தோல் பையில போட்டு ,பக்கத்து வீட்டு தையல்காரர் கிட்ட கொடுத்தாங்க
இந்த பைய பத்திரமா வச்சிருங்க நான் புண்ணிய யாத்திரை போயிட்டு வந்து வாங்கிக்குறேன்
ஒரு வேல நான் திரும்பி வரலைனா இதுல கொஞ்சம் பணம் இருக்கு அத அரசாங்கத்து கிட்ட ஒப்படைச்சு ஏழைகளுக்கு கொடுக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க
அவுங்க போனதுக்கு அப்புறமா அவர் அந்த பைய அடி பகுதில கிழிச்சி பாத்தாரு அதுல தங்க காசு இருந்ததும் ,அத எல்லாத்தையும் எடுத்துகிட்டாரு ,அவரு தோல் பை தக்கிறதுல கெட்டிக்காரர்ன்றதால ஒரு வித்தியாசமும் தெரியாம அந்த பைய சாதாரண நாணயங்களை உள்ள வச்சு தச்சிட்டாரு
அந்த பாட்டி திரும்ப வந்து அந்த பைய கேட்டாங்க ,அத வாங்கி பாத்த பாட்டிக்கு அதிர்ச்சியா இருந்துச்சு ,அதுல தங்க நாணயத்துக்கு பதிலா சாதாரண நாணயம் இருந்துச்சு
உடனே அக்பர்க்கிட்ட போய் முறையிட்டாங்க அந்த பாட்டி
அக்பர் இந்த விஷத்தை பத்தி பீர்பால் கூட சேந்து எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறதுனு விவாதிச்சாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு ,அரசே அந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தையல் கலைஞர் அவருக்கு அந்த பைய கிழிச்சி உள்ள இருக்குறத மாத்திட்டு திரும்ப தைக்கிற அளவுக்கு திறமை இருக்கானு முதல்ல சோதிங்கனு சொன்னாரு
உடனே அக்பர் ஒரு கிழிஞ்ச தோல் பைய எடுத்துக்கிட்டு மாறுவேஷத்துல அந்த தையல் கடைக்காரர் கிட்ட போனாரு ,
ஐயா இது எனக்கு ராசியான பை இத நீங்க புதுசு மாதிரி தச்சு கொடுத்தீங்கனா ஒங்களுக்கு ஒரு வெள்ளி காசு தரேன்னு சொன்னாரு
உடனே அந்த தையல்கடை காரர் அந்த பைய நல்ல படியா தச்சு கொடுத்தாரு ,அத வாங்கி பார்த்த அக்பர் இந்த பை கிழிஞ்ச மாதிரியே இல்லாம அவ்வளவு நுணுக்கமா தச்சிருக்காரு இவரு
அதனால் இவர் அந்த பாட்டி கொடுத்த பைய கிழிச்சி பணத்த எடுத்திருக்க வாய்ப்பிருக்குனு உறுதி செஞ்சாரு
அரண்மனைக்கு வந்த அரசர் காவலர்கள விட்டு அந்த தையல் கடை காரர இழுத்துட்டு வரச்சொல்லி நாலு சவுக்கடி கொடுத்தாரு
வலி தாங்க முடியாத அவரு தான் செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டாரு
தன்னோட தீர்ப்புக்கு உதவி செஞ்ச பீர்பாலுக்கு நன்றி சொன்னாரு அக்பர்