டாடாவும் அமிதாப் பச்சனும் – Tata and Amithab Bachchan story in Tamil:-அமிதாப் பச்சன் ஹிந்தி திரைப்பட துறையின் உச்சத்தில் இருந்த சமயம் ,உலகில் எங்கு சென்றாலும் அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரை பின்தொடர்ந்து அவரது கையெழுத்தை வாங்கி வந்தனர்

ஒரு முறை அவர் விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது ,அப்போது அருகில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்
மிகவும் நேர்த்தியான உடை உடுத்தி இருந்த அவர் மிகவும் படித்தவர் போல் காட்சியளித்தாலும் மிக நடுத்தர வர்க்கத்தினரை போலவே காட்சியளித்தார்
தன்னை அனைவரும் பார்த்து சிலாகிக்கும் இந்த காலத்தில் இவர்மட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட டீ யை அமைதியாக பருகுவதையும் ,தன்னிடமிருந்த புத்தகத்தை படிப்பதிலும் ,ஜன்னல் வழியாக இயற்கையை ரசிப்பதிலுமே இருப்பதை கவனித்தார் அமிதாப் பச்சன்

தன்னை அவர் அடையாளம் கண்டுகொள்ள வில்லையோ என்ற எண்ணம் அவருக்கு உருவானது ,உடனே அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்
நான் ஒரு நடிகனாக இருக்கிறேன் ,எனது பெயர் அமிதாப் பச்சன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்
உடனே அவர் பக்கம் திரும்பிய அவர் ஓ மிக்க நன்று ,எனது பெயர் ஜே,ஆர்,டி டாடா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டுவிட்டு
தனது புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபரா இவர் ,மிகவும் சாதாரண மனிதர் என்று நினைத்து விட்டோமே என்று ஆச்சர்யத்தோடு அவரையே பார்த்துக்கொண்டு இருந்தார் அமிதாப் பச்சன்
தனது புகழை விட ஆயிரம் மடங்கு புகழ் வாய்ந்த டாடா அவர்களின் நடவடிக்கைகளை கண்டு வியந்தார் அமிதாப் பச்சன்
எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும் தன்னை ஒருபோதும் படோபடமாக காட்டிக்கொள்ளாமல் இருந்த அவரது தன்மையை தான் பின்பற்றுவதாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறார் அமிதாப் பச்சன்
டாடா அவர்களை போல ,நிறைய மனிதர்களை நீங்கள் காண்பீர்கள் குழந்தைகளே ,அப்போது அவர்களின் நல்ல பண்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்