திருடனின் செருப்பு – Thenaliram Story-Theifs Chappal- தெனாலிராமனும் கிருஷ்ண தேவராயரும் ஒருநாள் நகர்வலம் போய்கிட்டு இருந்தாங்க
அப்ப பொது கிணத்துக்கு பக்கத்துல ஒரே கூட்டமா இருந்துச்சு உடனே அரசர் என்னனு விசாரிச்சாரு
உடனே அங்க இருந்தவங்க எல்லாரும் சொன்னாங்க இங்க நீர் இறைக்குற வாளி அடிக்கடி காணாம போகுது , புது வாளி வாங்கி வச்சாலும் யாரோ திருடிட்டு போய்டுறாங்கனு சொன்னாரு
இத கேட்ட அரசர் தெனாலி ராமன்கிட்ட அந்த திருடன கண்டுபிடிக்க சொன்னாரு ,உடனே அந்த கிணத்து பக்கம் போன தெனாலி ராமன் நிறைய காலடி தடங்கல் இருக்குறத பார்த்தாரு
உடனே அரசே இந்த காலடி தடத்துல இந்த ஒரு காலடி தடம் மட்டும் வேகமா வந்துட்டு வேகமா போன மாதிரி தெரியுது அதனால இந்த காலடி தடம் திருடனோடதா இருக்கலாம்ன்னு சொன்னாரு
அதுக்கு அரசர் சொன்னாரு அது சரி தெனாலி ராமா ஆனா அந்த திருடன எப்படி கண்டு பிடிக்க போறீங்கன்னு கேட்டாரு அதுக்கு தெனாலிராமன் சொன்னாரு அரசே நம்ம அரண்மனைக்கு பக்கத்துல இருக்குற செருப்பு தைக்கிறவர கூட்டி வந்து இந்த காலடி தடத்துக்கு ஏத்த செருப்ப செய்ய சொல்லுவோம் ,அத இந்த கிராமத்துல இருக்குற எல்லாரையும் போட சொல்லுவோம் யார் யாருக்கெல்லாம் செருப்பு பொருந்துதோ அவுங்கள நம்ம பாதாள சிறைல வச்சு விசாரிச்சா உண்மை தெரிஞ்சிடும்னு சொன்னாரு
உடனே அந்த செருப்பு தைக்கிறவர அங்க கூட்டிகிட்டு வந்தாங்க ,அவரும் அந்த காலடி தடத்த அளவு எடுத்தாரு ,அவரு செருப்பு தைக்க ஆரம்பிக்கும்போது தெனாலி ராமன் மெதுவா அவர் காதுகிட்ட என்னமோ சொன்னாரு
அதுக்கு அப்புறமா அவரு ஒரு செருப்ப செஞ்சு முடிச்சாரு ,உடனே அரசர் ஒவ்வொருத்தரா இந்த செருப்ப போட்டு பாருங்கன்னு சொன்னாரு ,அதுக்கு தெனாலி ராமன் சொன்னாரு ,அரசே இந்த செருப்பு நல்லவங்க காலுக்கு கூட பொருந்தலாம் அவுங்களுக்கு கேட்ட பேர் கிடைக்க கூடாது , அதனால நாம இந்த சோதனைய தனி அறையில வச்சு பண்ணலாம்னு சொன்னாரு
உடனே அரசரும் சரினு சொன்னாரு ,கிராம மக்கள் ஒவ்வொருத்தரா அந்த செருப்பு வச்சிருந்த அறைக்குள்ள போயிட்டு செருப்ப போட்டு பாத்துட்டு வெளிய வந்து அங்க இருந்த அரசர் கிட்டயும் தெனாலி ராமன் கிட்டயும் ரகசியமா அரசே எனக்கு அந்த செருப்பு சேருது ஆனா நான் திருடன் இல்லைனு சொல்ல ஆரம்பிச்சாங்க ,கிட்ட தட்ட எல்லாருக்கும் அந்த செருப்பு பொருந்துச்சு உடனே அரசருக்கு சின்னதா ஒரு சந்தேகம் வந்துச்சு.
அப்பத்தான் ஒரு ஆள் வந்து எனக்கு அந்த செருப்பு சேரல நான் திருடன் இல்லைனு சொன்னான் ,உடனே தெனாலி அவன சிறைபிடிக்க சொன்னாரு ,இத பார்த்த எல்லாருக்கும் ஆச்சர்யமா போச்சு செருப்பு சரியா பெருந்துந எங்க எல்லாரையும் விட்டுட்டு சரியா பொருந்தலைனு சொன்ன திருடனை எப்படி கண்டுபிடிசீங்கனு தெனாலி ராமன்கிட்ட கேட்டாங்க
அப்பத்தான் தெனாலி ராமன் சொன்னாரு அரசே ,நான் உங்க கிட்ட காட்டுன காலடிக்கும் திருடனுக்கு எந்த சம்பந்தமும் இல்ல ,நான் அந்த செருப்பு தைக்கிறவர் அளவு எடுக்கும்போது எல்லா மனிதனுக்கும் பொருந்துற மாதிரி பெரிய செருப்பா தைக்க சொல்லி ரகசியமா சொன்னேன்
அதனாலதான் எல்லாருக்கும் அந்த செருப்பு பொருந்துச்சு ,ஆனா சின்ன கால் உடைய அந்த திருடன் தனக்கு மட்டும் பொருந்தலைனு பொய் சொன்னான் அதனால அவன்தான் திருடன்னு கண்டுபிடிச்சேன்னு சொன்னாரு
இத கேட்ட அரசர் மட்டுமில்லாம அங்க இருந்த எல்லாரும் ரொம்ப ஆச்சர்ய பட்டு போனாங்க