நல்ல பெண்ணும் கொடுமைக்கார சித்தியும் Tamil Moral story For Children :- ஒரு கிராமத்துல ஒரு அப்பாவும் தியானு ஒரு குட்டி பொன்னும் இருந்தாங்க,அந்த பொன்னோட அம்மா இல்லாததால அவுங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி கியானு இன்னொரு பொன்னும் பெத்துக்கிட்டாரு
அந்த சித்தி அவுங்க கியாவ நல்லா பாத்துகிட்டு தியாவ கொடும படுத்த ஆரம்பிச்சாங்க
தியா ரொம்ப நல்ல பொன்னா இருந்தா ,ஆனா கியா சோம்பேறி பொன்னா இருந்த ,ஒருநாள் நீ போய் யார் வீட்லயாவது வேல செஞ்சு நிறைய பணம் கொண்டுவான்னு தியாவ வீட்டை விட்டு வெளியில தள்ளிட்டாங்க
சோகமா வேலை தேடி நடந்து போனா தியா
அப்படி போறப்ப ஒரு பழைய மரம் ஒன்ன பாத்தா ,அந்த மரம் அவ கிட்ட அழகிய பெண்ணே நீ எங்க போறான்னு கேட்டது
அதுக்கு அவ சொன்னா நான் வேலைதேடி போறேன்னு சொன்னா
நீ போகுறதுக்கு முன்னாடி என்னோட கிளைகள்ல இருக்குற காய்ந்த குச்சிகள உடைச்சி எனக்கு உதவுரியான்னு கேட்டுச்சு
எல்லோருக்கும் நல்லது செய்யிற தியா அந்த மரத்துல ஏறி அந்த பழைய கிளைகளை உடைச்சு சரி செஞ்சா
கொஞ்ச தூரம் போனதும் ஒரு திராட்சை கொடி இருந்துச்சு
அந்த கோடி கேட்டுச்சு அழகிய பெண்ணே நீ எங்க போறான்னு
நான் வேலைதேடி போறேன்னு சொன்னா தியா
சரி சரி ஆனா என்னோட பழைய காய்ந்த கொடிகள் எனக்கு பாரமா இருக்கு அத கொஞ்சம் சுத்தம் செஞ்சுவிடேன்னு சொன்னா
உடனே தியா போயி அந்த திராட்சை கொடிய சுத்தம் செஞ்சுட்டு மேல நடக்க ஆரம்பிச்சா
அவ போற வழியில ஒரு மண் அடுப்பு இருந்துச்சு அந்த அடுப்பு ரொம்ப உடைஞ்சு போயிருந்துச்சு ,தியா கிட்ட அந்த உடைஞ்ச பகுதிகள சரி செய்ய உதவு கேட்டுச்சு அந்த அடுப்பு
உடனே பக்கத்துல இருக்குற குளத்துக்கு போன தியா அங்க இருந்து
களிமண்ணை எடுத்துட்டு வந்து தண்ணி ஊத்தி கலக்கி அந்த மண் அடுப்ப சரி செஞ்சா
தொடர்ந்து நடந்த தியா ஒரு பாழடைந்த கிணத்து கிட்ட வந்தா அந்தக் கிணறு சுத்தமில்லாமல் இருந்துச்சு
அந்த கிணறு கேட்டுச்சு அழகிய பெண்ணே நீ எங்க போறனு
அதுக்கு தியா சொன்னா நான் வேலை தேடி போறேன்
நீ வேலைதேடி போறதுக்கு முன்னாடி என்ன கொஞ்சம் சுத்தம் செய் அப்படின்னு வேண்டிக் கேட்டுக்கிச்சு அந்த கிணறு
உடனே தியா அங்க இருக்குற வாளிய எடுத்து நீர் இறைத்து கிணறோட சுவர் எல்லாத்தையும் சுத்தம் செஞ்சா , உடனே அந்த கிணறு தியாகு ரொம்ப நன்றி சொல்லுச்சு
தொடர்ந்து நடந்த தியா கிட்ட ஒரு அழுக்கு நாய்க்குட்டி வந்துச்சு ,என்ன சுத்தம் செஞ்சு விடுங்கக்கான்னு கேட்டுச்சு அந்த நாய்க்குட்டி
அது மேல பரிதாப பட்ட தியா அந்த நாய்க்குட்டிய ஆத்துக்கு தூக்கிட்டு போயி குளிப்பாட்டி விட்டா
தொடர்ந்து நடந்த தியா ஒரு காட்டுப் பகுதியில இருக்கிற ஒரு பழைய மாளிகை கிட்ட வந்தா,அந்த மாளிகைக்கு உள்ளே போன தியா எனக்கு இங்க ஏதாவது வேலை கிடைக்குமானு கேட்டா
அது உண்மையாகவே தேவதைகள் வாழ்ற மாளிகை அங்க இருக்கிற தேவதைகள் எல்லாரும் சேர்ந்து நீ இங்கேயே வேலை செய்யலாம் இங்க இருக்கிற எல்லா அறைகளையும் சுத்தம் செய்யிற வேலை இனிமே உனக்கு அப்படின்னு சொன்னாங்க
இந்த வீட்டில மொத்தம் ஏழு அறைகள் இருக்கு அதுல முதல் ஆறு அறைகளை மட்டும் சுத்தம் செஞ்சா போதும். கடைசியா இருக்கிற 7வது அறையை நீ எப்பயும் திறக்கக் கூடாதுனு சொன்னாங்க அந்த தேவதை.
அதைக் கேட்டதும் ரொம்ப நல்ல பொண்ணா நடந்துக்கிட்டா தியா தினந்தோறும் அந்த வீட்டை சுத்தம் பண்ற வேலைய பொறுப்பா செஞ்சா ,
இப்படியே ஒரு வருஷம் போச்சு ஒரு வருஷம் கழிச்சு என்னோட வீட்டுக்கு போயி தன்னோட அப்பாவ பாக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டா தயா
உடனே அந்த தேவதைகள் எல்லோரும் சேர்ந்து அந்த ஏழாவது அறைக்கதவை திறந்து உள்ள கூட்டிட்டு போனாங்க ,அங்க விலை உயர்ந்த நவரத்தினங்களும் தங்க நாணயங்களும் குவிஞ்சி கிடந்தது
நீ மேல படுத்து எந்திரிச்சா உனக்குத் தேவையானதை விட அதிகமான பொருட்கள் உன்னோட ஒட்டிவிடும் நீ அதை கொண்டு போய் வாழ்நாள் முழுதும் சந்தோஷமா இருக்கலாம்னு அந்த தேவதைகள் சொல்லுச்சு
அது மாதிரியா அந்த பொண் நகைகள் மேல படுத்து எந்திரிச்சா தியா அப்ப நிறைய நாணயங்களும் வைர வைடூரியங்கள் அவ கூடிவே ஒட்டிக்கிச்சு
தேவதைகளுக்கு நன்றி சொல்லிட்டு தன்னோட வீட்டுக்கு நடந்து போக ஆரம்பிச்சா போற வழியில அவ உதவி செஞ்ச நாய்க்குட்டியை பார்த்தா அந்த நாய்க்குட்டி இங்க வான்னு கூட்டிட்டு போயி வைரங்கள் நிறைந்த ஒரு புதையலை காமிச்சு,
தனக்கு உதவி செய்ததற்கு நன்றி விசுவாசமா இந்த நாய் தனக்கு இவ்வளவு பெரிய புதையலை காமிச்சி இருக்கு அப்படின்னு நினைச்சு தியா அவ்வளவு எடுக்க முயற்சி பண்ணாம தனக்கு தேவையானதை மட்டும் தன்னோட பையில எடுத்துக்கிட்டா
நாய்க்கு நன்றி சொல்லிட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சா
அவ போற வழியில் அவளுக்கு ரொம்பப் பசி எடுத்துச்சு , அப்பத்தான் அவ சரி செஞ்சு அந்த மண் அடுப்ப பார்த்தா அந்த மண்அடுப்பு இப்ப நிறைய சமையல் செய்ர இடமா மாரி இருந்துச்சு
அழகிய பெண்ணே நீ என்ன சுத்தம் செஞ்சு நல்லபடியா வச்ச அதனால நிறைய பேரு என் மேல சமைக்கிறாங்க அவங்க வச்சுட்டு போற உணவை எடுத்து உதவி தேவை படுறவங்களுக்கு கொடுக்கிறேன்,நீ உனக்கு வேண்டிய உணவை இதுல சாப்பிட்டுக்கோ அப்படின்னு சொல்லுச்சு
உடனே அந்த உணவை சாப்பிட்ட தியா மெதுவா நடக்க ஆரம்பிச்சா
நடந்து போறப்ப தியாவுக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு அப்படி போறப்ப அவ சுத்தம் செஞ்ச கிணறு வந்துச்சு . அவளை வரவேற்ற கிணறு இப்ப எனக்குள்ள சுத்தமான தண்ணீர் இருக்கு நீ வேண்டிய அளவு தண்ணீரை எடுத்து குடித்து உன்னோட தாகத்த தீத்துக்கோன்னு சொல்லுச்சு
நிறைய தண்ணி குடிச்சு தாகத்த தீத்துக்கிட்ட தியா கிணற்றுக்கு நன்றி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிச்சா
அதுக்கு அப்புறமா அவள் சுத்தம் செஞ்சு உதவி செஞ்ச திராட்சை கொடிய பார்த்தா இப்ப அந்த திராட்சை கொடி நிறைய திராட்சைகளை வெச்சிருந்துச்சு
அழகிய பெண்ணே நீ எனக்கு உதவி செஞ்ச அதனால இப்ப நான் நிறைய திராட்சை கனிகளை கொடுக்கிறேன்,இந்தா என்னோட திராட்சை கனிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை வைத்து உனக்காக பழரசம் செஞ்சிருக்கேன் இதை குடிச்சிட்டு நல்லா நடந்து போ அப்படின்னு சொல்லுச்சு
அதே மாதிரி நடந்து போனது தியா அவ உதவி செய்த ஆப்பிள் மரத்தை பார்த்தால் அந்த மரத்துல இப்ப நிறைய நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்துச்சு அவள வரவேற்ற அந்த ஆப்பிள் மரம் உனக்கு எவ்வளவு பழங்கள் வேணுமோ எல்லாத்தை எடுத்துக்க அப்படின்னு சொன்னது , தன்னோட அப்பாவுக்காக கொஞ்சம் பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் தியா,அவங்க அப்பாவை பார்த்து நடந்தது எல்லாம் சொன்னா
அத கேட்ட சித்திக்கு பொறாமை தாங்கல,நீ என்ன இவ்வளவு சம்பாதிசுட்டு வந்திருக்கியா உன்ன விட என் மக ரொம்ப கெட்டிக்காரி அவ போய் இன்னும் நிறைய சம்பாதிப்பா அப்படின்னு சொல்லிட்டு அவ மகள அதே மாதிரி சம்பாதிப்பதற்கு அனுப்பிச்சா
கியா நடந்து போறப்ப அதே மாதிரி ஒரு ஆப்பிள் மரம் வந்துச்சு தனக்கு உதவும்படி கேட்டுச்சு சோம்பேறியான கியா என்னால எல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சா
அடுத்ததா திராட்சை கொடியையும் பார்த்தான் திராட்சை கொடிதன்ன சுத்தம் செய்ய சொல்லுச்சு ,அதையும் செய்யாம மேலும் நடந்தது உடைந்து போன அடுப்ப பார்த்தா அடுப்பு கேட்ட உதவியையும் செய்யாம தொடர்ந்து நடக்க ஆரம்பிச்ச கியா
பாழடைஞ்ச கிணத்த பாத்த கியா அது தன்னை சுத்தம் செய்ய சொன்னத செய்யாம தன்னோட வேலையை பார்த்துட்டு நடக்க ஆரம்பிச்சா
போற வழியில அந்த அழுக்கு நாய்க்குட்டியும் வந்துச்சு இந்த நாய்க்குட்டியை பார்த்து எரிச்ச பட்ட கியா அது என்ன சொல்லுதுன்னு கூட கேட்காம மேலும் நடக்க ஆரம்பிச்சா
கடைசியா அந்த தேவதைகள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்து அ எனக்கு வேலை வேணும்னு கேட்டா, அப்ப அந்த தேவதைகள் சொன்னாங்க இங்கே இருக்கிற எல்லா இடத்தையும் சுத்தமாக வச்சிக்கிறது உன்னோட வேலைனு சொன்னாங்க
தியா கிட்ட சொன்ன மாதிரியே ஏழாவது கதவைத் திறக்கவே கூடாதுன்னு சொன்னாங்க,சோம்பேறியான கியா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரிவரச் செய்யாம சோம்பேறியா இருந்தா
அவளுக்கு தன்னுடைய அக்கா நிறைய பொன்னும் பொருளும் ஏழாவது அறையிலிருந்து எடுத்தது ஞாபகத்துக்கு வந்துச்சு,உடனே அந்த ஏழாவது அறையை திறந்து பார்த்தான் ஆனா அங்க அந்த அறை ரொம்ப பாழடைந்து போய் இருந்துச்சு
அங்கு இருந்த பழைய வண்டுகளும் தேனீக்களும் அவ முகத்தில் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு பயந்துபோன கியா வேகமாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிச்சா
போற வழியில அந்த நாய்க்குட்டியை பார்த்தா இந்த வண்டுகள் எல்லாம் என்ன தொரத்திக்கிட்டு வருதுங்க என்னை காப்பாத்து நாயே அப்படின்னு சொல்லி கெஞ்சினா
ஆனால் தனக்கு உதவி செய்யாததால அவளுக்கு உதவி செய்ய முன்வரல அந்த நாய்
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பாழடைந்த கிணறு கிட்ட வந்தா கொஞ்சம் தண்ணி கிடைக்குமா நாம் முகத்தைக் கழுவிக்கிறேன் அப்படின்னு கேட்டா
நீ எனக்கு உதவி செய்யாதனால நான் இன்னும் பாழடைந்து போய்தான் இருக்கேன் எனக்கு உள்ள இருந்து தண்ணீர் எடுக்க முடியாது அதனால நீ வேற இடம் பாருன்னு சொல்லி அனுப்பிடுச்சு அந்த கிணறு
கொஞ்ச தூரம் போனதும் அவளுக்கு ரொம்ப பசிக்குது அந்த அடுப்பு இருக்கிற இடத்துக்கு பக்கத்துல போயி எனக்கு ஏதாவது உணவு கிடைக்குமான்று கேட்டா
நீ அன்னைக்கு என்ன சரி செஞ்சிருந்தா யாராவது என் மேல உணவு சமைச்சிருப்பாங்க அந்த உணவு உனக்கு கிடைத்திருக்கும் நீ என்ன அப்படியே விட்டுட்டு போன அதனால நான் பாழடைந்து அடுப்பா இருக்கிறேன்
என்னால் சமைக்கமுடியாது உனக்கு உணவு தரவும் முடியாது நீ வேற இடம் பாரு அப்படின்னு சொல்லி அனுப்பி வைத்து அந்த அடுப்பு
அடுத்ததா திராட்சைக்கொடி கிட்ட போன கியா ஏதாவது உணவு கிடைக்குமான்னு கேட்டா திராட்சை சிரிச்சுகிட்டே சொல்லுச்சு நீ என்னை சுத்தம் பண்ணல அதனால உனக்கு திராட்ச கொடுக்க முடியாது அப்படின்னு சொல்லுச்சு
அடுத்ததா ஆப்பிள் மரத்துக்கிட்ட வந்த கியா எனக்கு ரொம்ப பசிக்குது எனக்கு ஒரு ஆப்பிள் கு டு அப்படின்னு கேட்டா
நீ எனக்கு அன்னைக்கு உதவாததாள இன்னைக்கு ஆப்பிள் தர மாட்டேன்னு சொல்லி அனுப்பி வச்சது அந்த ஆப்பிள் மரம்
வெறும் கையோட வீட்டுக்கு வந்த கியவையும் அவங்க அம்மாவையும் கோவத்தோட பார்த்த அவுங்க அப்பா
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் மகள ரொம்ப கொடும படுத்துனீங்க ,இப்ப அவ சம்பாதிச்சதுக்கு அப்புறமா நிறைய பொறாமை படுறீங்க அதனால நீங்க வீட்டை விட்டு போங்கன்னு சொல்லி வெளிய அனுப்பிச்சிட்டாரு அந்த அப்பா
The Deligent Girl And The Lazy Girl Story in Tamil