The Good Daughter – நல்ல மகள் – Tamil Moral Stories in Pdf

The Good Daughter – நல்ல மகள் – Tamil Moral Stories in Pdf :- அமலா ஒரு நல்ல பிள்ளை

அம்மா அப்பாவுக்கு எப்பவும் செலவு வைக்காம நல்ல புள்ளையா இருந்தா

Tamil Moral Stories in Pdf

ஒரு நாள் அவங்க அம்மா கூட மார்க்கெட்டுக்கு போனப்ப அங்க ஒரு அழகான செயின் பார்த்தா அவளுக்கு அது ரொம்ப பிடிச்சு இருந்துச்சு

அம்மாவுக்கு செலவு வைக்கக்கூடாது அதனால ஒன்னுமே சொல்லாம வீட்டுக்கு வந்துட்டா கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வைத்து அடுத்த தடவை மார்க்கெட் போறப்ப அவங்க அம்மாகிட்ட சொல்லி அந்த செயினை வாங்கினா.

அவளுக்கு அந்த செயின் ரொம்ப பிடிச்சிருந்தது இதை பார்த்த அவளோட அம்மா அப்பாவுக்கு ஆஹா நம்ம மகளுக்கு இந்த செயின் ரொம்ப பிடிச்சிருக்கு

என்னதான் இருந்தாலும் இது டூப்ளிகேட் செயின் அவளுக்கு நல்லதா ஒரு தங்கச் செயின் வாங்கி கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணாங்க

கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்து வச்சு அமலாவுக்கு ஒரு நல்ல தங்க செயின் செஞ்சாங்க

ஒருநாள் அமலாவோட அப்பா பாப்பா நீ போட்டிருக்க செயினை என்கிட்ட கொடு அப்படின்னு சொன்னாரு

அந்த செயின் மேல ரொம்ப ஆசை இருந்தாலும் அதை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா

இதே மாதிரி ரெண்டு மூணு தடவை கேட்டுப் பார்த்தும் அவ அத கொடுக்கவே இல்லை

ஒருநாள் அவ தூங்கும்போது அந்த செயின அவுங்க அப்பா கழட்ட முயற்சி பண்ணுனாரு

டக்குனு முழிச்சு பார்த்த அமலா ஏம்பா எனக்கு புடிச்ச செயின கழட்டுறீங்கன்னு கேட்டா

அவரு சொன்னாரு இல்லடா உனக்கு பிடித்திருந்தாலும் இந்த செயின் ஒரு டம்மி செயின் அதனாலதான் அப்போ உனக்கு ஒரிஜினல் தங்க செயினை செஞ்சு கொண்டு வந்திருக்கேன் அப்படின்னு சொன்னாரு

அப்பத்தான் அமலாவுக்கு அவுங்க தாத்தா சொன்ன ஒரு கதை ஞாபகம் வந்துச்சு கடவுள் நம்ம கிட்ட இருந்து ஏதாவது ஒன்னை எடுத்து கிட்டாருன்னா அதைவிட நூறு மடங்கு நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய பொருளை தருவாறு அப்படிங்கிற பழமொழியும் கதையும் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு