Money Can’t Buy Happiness – தமிழ் சிறுகதை

Money Can’t Buy Happiness – தமிழ் சிறுகதை :- சிவா ஒரு பத்து வயசு பையன்

அவனுக்கு குடும்பத்தோட இருக்கணும்னு ரொம்ப ஆச

Money Can't Buy Happiness - தமிழ் சிறுகதை

வேலைக்கு போற அவுங்க அம்மாவும் வியாபாரம் செய்ற அவுங்க அப்பாவும் நிறய உழைக்கிறதால அவுங்களால அதிகமா வீட்டுல இருக்க முடியிறது இல்ல

சிவாவுக்கு அவுங்க தன்னோட நண்பர்கள் ,பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள்னு அவுங்க அவுங்க அப்பா அம்மாவோட இருக்குறத பாக்குறப்ப ரொம்ப பொறாமையா இருக்கும்

ஒரு நாள் அவுங்ககிட்ட கேட்டான் சிவா அப்பா அம்மா நீங்க இப்ப எவ்வவு சம்பாதிக்கிறீங்கன்னு சொல்லுங்கன்னு சொன்னான்

Money Can't Buy Happiness

ஏன்டா அப்படி கேக்குறன்னு கேட்டாரு அவுங்க அப்பா

அது ஒரு சின்ன கணக்கு சொல்லுங்க அப்படின்னு சொன்னான்

ஒரு ஐம்பதாயிரம் சம்பாதிக்குறோம்னு சொன்னாங்கா

Money Can't Buy Happiness

அதுக்கு சிவா அப்ப ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் ரூபா சம்பாதிக்குறிங்க

இந்தாங்க என்னோட உண்டியல் பணம் 2 ஆயிரம் ரூபாய்

ஒரு நாள் என்னோட நேரத்தை செலவிடுங்கன்னு சொன்னான்

சிவாவோட அறிவையும் நிலைமையையும் புரிச்சிக்கிட்ட அவனோட பெற்றோர்

எவ்வளவு பணம் இருந்தாலும் ஒரு நிமிசத்த கூட வாங்க முடியாதுன்ற நீதிய அவுங்க புரிச்சிகிட்டு சிவாவோட சந்தோசமா வாழ்ந்தாங்க