Tamarind and Watermelons -Mulla Story -தண்ணி பழம் புளியம் பழம்

Tamarind and Watermelons -Mulla Story -தண்ணி பழம் புளியம் பழம் :-முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவங்களுக்கு முல்லாவோட நகைச்சுவையான பேச்சும் அணுகுமுறையும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு அதனாலவே முல்லாவ சுத்தி எப்பயும் நண்பர்கள் இருந்துகிட்டே இருப்பாங்க

Mulla's Many Friends Appreciating His Wit

முல்லா தினமும் சந்தைக்கு போயி வியாபாரம் பார்த்து தன்னுடைய வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருந்தாரு சந்தைக்கு போகுறப்பையும் வர்றப்பையும் பேச்சுத் துணைக்கு எப்பயும் முல்லாவோட ஓட நண்பர்கள் கூடவே நடந்து வருவாங்க,முல்லா செய்யுற சேட்டைகளையும் ,நகைசுவை பேசிச்சுக்களையும் ரசிக்கவே அவுங்க அவர் கூட வருவாங்க

 Discovering the Watermelon Vine Mulla Going to Market with Friends

ஒரு நாள் முல்லாவும் அவரோட நண்பரும் சிரிச்சு பேசிக்கிட்டு காட்டு வழியா நடந்து போறப்ப ஒரு பெரிய தர்பூசணி செடிய பார்த்தாங்க அதுல பெருசு பெருசா தர்பூசணி பழங்கள் பழுத்து இருந்துச்சு அத பாத்து இந்த வருஷம் தர்பூசணி நல்லா விளைஞ்சிருக்கு அப்படின்னு முல்லாவோட நண்பர் சொன்னாரு அதைக் கேட்டுக்கிட்டே ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சாங்க

 Resting Under the Tamarind Tree

அப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஓய்வு எடுக்கணும்னு தோணுச்சு உடனே அங்க இருந்த பெரிய புளிய மரத்துக்கு அடியில இருந்த கல் பெஞ்சுல உட்கார்ந்து ஓய்வு எடுத்தாங்க அப்ப கீழே கிடந்த புளியம்பழங்களைப் பார்த்த முல்லாவோட நண்பர்

Commenting on the Tamarind Fruits

முல்லா இங்க பாருங்க நிறைய புளியம் பழங்கள் கீழ கிடக்கு அப்படின்னு சொன்னாரு முல்லாவும் அதை பார்த்து இந்த வருஷம் இந்த புளியமரம் நிறைய காய் காட்சி இருக்கு அப்படின்னு சொன்னாரு அப்பத்தான் முல்லாவோட நண்பர் சொன்னாரு உங்கள மாதிரியே இந்த கடவுளும் சேட்டைக்காரர் தான் போல இருக்கு அப்படின்னு

Friend Explains God's Prank

அதுக்கு முல்லா சொன்னாரு ஏன்பா கடவுளை போய் சேட்டை பிடிச்சவன்னு சொல்ற அப்படின்னு கேட்டாரு அதுக்கு முல்லாவோட நண்பர் சொன்னாரு இங்க பாருங்க இவ்வளவு பெரிய மரத்துல இவ்வளவு குட்டி குட்டியா புளியம்பழங்கள் இருக்கு ஆனா அங்க பாருங்க இவ்வளவு குட்டி செடிள எவ்வளவு பெரிய பழங்கள் காச்சி இருக்கு இதெல்லாம் செஞ்ச கடவுள் சேட்ட புடிச்ச ஆளு தானே அப்படின்னு கேட்டாரு

 Tamarind Pod Falls on Friend's Head

அப்பத்தான் ஒரு புளியம்பழம் முல்லாவோட நண்பர் தலையில நங்குன்னு விழுந்துச்சு இதை பார்த்த முல்லா வாய்விட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு இத பார்த்த முல்லாவோட நண்பர் இப்ப என்ன நடந்துடுச்சு ஏன் முல்லா இப்படி ஒரு பயங்கரமான சிரிப்பு சிரிக்கிறீங்க அப்படின்னு கேட்டாரு,

Mulla's Witty Punchline

அப்பதான் முல்லா சொன்னாரு நல்லவேளை கடவுள் சேட்டை பிடித்தவரா இருக்காரு அப்படி இல்லாம இவ்வளவு பெரிய மரத்துல தர்பூசணி சைசுக்கு புளியம்பழம் காய்ச்சி இருந்துச்சுன்னு வச்சுக்கங்க இந்நேரம் உங்க தல தர்பூசணி பழம் மாதிரி சிதறி போயிருக்கும் அப்படின்னு சொன்னாரு

இத கேட்ட முல்லாவோட நண்பர் முல்லா உடைய நகைச்சுவை உணர்வு பார்த்து அவரும் முல்லா கூட சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சாரு

Both Laughing Together