Story Of Hanukkah for kids – ஹனுக்கா கதை – Tamil Kids Story

Story Of Hanukkah for kids – ஹனுக்கா கதை – Tamil Kids Story :- பழங்காலத்துல இஸ்ரேல் நாட்டுல இருக்குற ஜெருசலேம் நகரத்துல ஒரு அழகான கோவில் இருந்துச்சு

அந்த நாட்டுக்கு பக்கத்துல ஆண்டியகஸ்ன்ற அரசன் சிரியா நாட்டை ஆட்சி செஞ்சுகிட்டு வந்தான்

அவனுக்கு மக்கள் எல்லாரும் வித விதமான நம்பிக்கையும் ,மதத்தையும் பின்பற்றாது பிடிக்கல,அதனால் இனிமே இந்த உலகத்துல இருக்குற எல்லாரும் தன்னோட மதத்த தான் பின்பற்றணும்னு சொன்னான்

அவனோட சர்வாதிகார ஆட்சிக்கு பயந்து நிறைய மக்கள் அவனோட மதத்த பின்பற்ற ஆரம்பிச்சாங்க

தன்னோட நாட்ட மாத்துன அவன் ,இஸ்ரேல் நாட்டு மேலயும் போர்தொடுச்சு ஜெயிச்சான் ,அந்த நாட்டு மக்களும் தன்னோட மதத்த மட்டும்தான் பின்பற்றணும்னு ஆணை பிறப்பிச்சான்

இது அங்க பூர்வீகமா வாழ்ந்துகிட்டு வந்த ஜியூஸ் மக்கள ரொம்ப பாதிச்சது

இருந்தாலும் அரசனோட ஆணைய மீரா முடியாம தவிச்சாங்க

இஸ்ரேல் மாநகரத்துல இருந்த கோவில்கள் எல்லாத்தையும் இடிக்க ஆரம்பிச்சான் அந்த திமிர் பிடித்த அரசன் ,இஸ்ரேல் மாநகரத்துல இருந்த பழங்காலத்து சர்ச் ஒண்ணயும் கைப்பற்றினான் அந்த அரசன்

அந்த சர்ச்ல இருந்த எல்லா சிலைகளையும் உடைச்சான்,எல்லா வசதிகளையும் அடிச்சு நொறுக்குனாங்க படை வீரர்கள்

இருந்தாலும் அவனோட இந்த தீய செயலை எதிர்க்க சிலபேர் துணிஞ்சாங்க,அப்படி சண்ட போட நினைக்கிறவங்கள சிறை பிடிச்சி கொடும படுத்தினான் அந்த அரசன்

ஜூதா மேக்கபேன்ற துணிச்சலான வீரன் அவனோட தம்பிங்களோட சேர்ந்து அவன எதிர்க்க ஆரம்பிச்சாங்க

கொஞ்ச கொஞ்சமா பலம் சேர்த்துக்கிட்டு தீய அரசனோட படைய விரட்டி அடிச்சாங்க

யாருமே எதிர்பார்க்காத இந்த வெற்றியாள ஜெருசலம் நகரத்த கைபற்றுணங்க அந்த வீரர்கள்

மீண்டும் தங்களோட சடங்குகள செய்யணும்னு அந்த அழகிய சர்ச் குள்ள போனப்ப அவுங்களுக்கு அதிர்ச்சியா இருந்துச்சு

அங்க இருந்த மதில்களும் ,துறைகளும் உடைக்க பட்டிருந்துச்சு ,தங்கத்துல செஞ்சு வச்சிருந்த தூண்கள் வெட்டி எடுக்க பட்டுருந்துச்சு

ஒரு விளக்கு போடக்கூட அங்க வசதி இல்லாம இருந்துச்சு

எல்லா வீரர்களும் ஒரு விளக்குவது இருக்கன்னு தேடுனாங்க ,அப்ப அங்க ஒரு என்னை ஜாடி இருந்துச்சு ,அது என்ன எண்ணைய் எதுக்கு அந்த சர்ச் குள்ள இருக்குன்னு எதுவுமே தெரியாத வீரர்கள் அந்த எண்ணெயை உபயோகிச்சு விளக்கு போட்டாங்க

கொஞ்ச நேரம் எரியும்னு நினச்ச அந்த விளக்கு எட்டு பகலும் எட்டு இரவும் இடை விடாம எரிஞ்சது ,அப்படி ஏறியியர ஒரு பொருள் இந்த உலகத்துலயே இல்லைங்கிறது அங்க இருந்த எல்லாருக்கும் தெரியும்

அப்பதான் ஜூதா மேக்கபேக்கு புரிஞ்சது கடவுள் தங்களோட தான் இருக்கருகிறது

இந்த சம்பவத்துக்கு அப்புறமாத்தான் ஹனுக்கா பண்டிகை விழா கொண்டாடப்படுத்து ,இந்த தினத்தை ஒட்டி எல்லா வீடுகள்லயும் 8 தினங்கள் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏத்துறதும் பழக்கத்துக்கு வந்துச்சு