நன்று செய் நன்றே நடக்கும் – Priest Good Deed Reward – story for kids with moral in tamil :- ஒரு முறை கிருஷ்ணரும் அர்ஜுனரும் மெதுவா நடந்து போய்கிட்டு இருந்தாங்க
அப்ப ஒரு சாமியார் பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாரு
உடனே அர்ஜுனர் 100 தங்க காசு உள்ள பைய அவருக்கு கொடுத்தாரு
அத வாங்கிகிட்ட சாமியார் வீட்டுக்கு போகுற வழியில இன்னொரு பிச்சை எடுக்குறவரு வந்து இவரு கிட்ட உதவி கேட்டாரு
அதுக்கு எந்த பதிலும் சொல்லாம வீட்டுக்கு நடக்க அடம்பிச்சாரு
அப்பத்தான் ஒரு திருடன் வந்து அந்த பைய பிடுங்கிட்டு போயிட்டான்
ஏமாற்றம் அடைஞ்ச சாமியார் மறுநாள் அதே இடத்துல பிச்சை எடுக்க ஆரம்பிச்சாரு
அப்ப அங்க வந்தாங்க கிருஷ்ணரும் அர்ஜுனரும்
நடந்தத கேட்ட அர்ஜுனர் ஒரு வைர மோதிரத்த அவரு கிட்ட கொடுத்தாங்க
அத எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போனாரு போறப்ப சில முதியவர்கள் அவருகிட்ட சாப்பாடு கேட்டாங்க
அத கண்டுக்காம வீட்டுக்கு போன முதியர் ஒரு பாத்திரத்துல அந்த மோதிரத்த வச்சுட்டு தூங்கபோனாரு
அவரோட மனைவி காலைல எந்திருச்சு அந்த பாத்திரத்த எடுத்துக்கு ஆத்துல போயி தண்ணி எடுக்க போனாங்க அந்த மோதிரம் தண்ணில விழுந்துடுச்சு
மறுநாளும் அந்த சாமியார் பிச்சை எடுக்குறத பாத்த அர்ஜுனரும் கிருஷ்ணரும் வந்து அந்த சாமியாருக்கு ஒரு செம்பு காச கொடுத்தாங்க
அத எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போறப்ப ஒரு மீன் விக்கிற பையன பாத்தாரு அந்த சாமியார் உடனே அந்த செம்பு காச கொடுத்து அந்த சின்ன மீன வாங்குனாரு
அந்த மீன் ஜாடி ரொம்ப சின்னதா இருந்ததால அந்த மீன் தவிக்கிறத பாத்தாரு
அந்த மீன் மெதுவா அந்த வைர மோதிரத்த கக்குச்சு
அப்ப அங்க வந்தான் அந்த திருடன் நேருக்கு நேர் அந்த சாமியார பாத்த அந்த திருடன் மனசு மாறி அந்த தங்க காசுகளை அவருக்கே திருப்பி கொடுத்துட்டாரு
அப்பதான் அர்ஜுனர் கிட்ட கிருஷ்ணர் சொன்னாரு
அடுத்தவருக்கு கொடுக்க நமக்கு பொருளும் நேரமும் இருக்கும்போது அந்த வைப்ப தவற விடக்கூடாது , நீங்க கொடுத்ததுக்கும் மேல கடவுள் உங்களுக்கு தருவாரு அப்படினு சொன்னாரு