Difference of work – small tamil story for kids :- ஒரு டாக்டர் ஒருநாள் தன்னோட கார வேலைக்கு கொண்டுபோனாரு
அந்த மெக்கானிக் சொன்னாரு டாக்டர் நானும் நீங்களும் கிட்ட தட்ட ஒரேமாதிரி வேலைதான் பாக்குறோம்னு சொன்னான்
அத கேட்ட டாக்டருக்கு குழப்பம் , அந்த மெக்கானிக் திரும்பவும் சொன்னான்
அதாவது டாக்டர் நான் இந்த கார்ல என்ன கோளாறுன்னு முதல்ல கண்டுபிடிப்பேன் அடுத்து எதாவது வால்வ் மாத்தணும்னா மாத்துவேன்
அடைப்பு இருந்த எடுத்து விடுவேன் ,திரும்ப அதே இடத்துல பொருத்தி பழையபடி ஓட வைப்பேன்னு தற்பெருமை பேசுனான்
அதுக்கு அந்த டாக்டர் சொன்னாரு ” என்ஜின் வேலை செய்றப்ப அத ரிப்பேர் செய்ய உங்களால முடியுமான்னு கேட்டாரு”
அந்த பதில கேட்ட மெக்கானிக்கு தூக்கி வாரிபோச்சு
அடடா ஒரு சின்ன வாக்கியத்துல தன்னோட எல்லா தற்பெருமையும் தவிடுபொடி ஆகிடுச்சே
என்னதான் தான் திறம்பட வேலைசெஞ்சாலும் ,டாக்டர் உயிரோட இருக்குற மனிதனுக்கு மருத்துவம் பாக்குறது ஒரு உன்னத மான வேலை
அவரோட இந்த செயல நம்மளோட பொருத்தி பாத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்னு நினச்சு வறுத்த பட்டான் அந்த மெக்கானிக்