விதியை வென்ற நாய்க்குட்டி -Saacha & Guru: Little Paws, Big Dreams – Champions of the Heart:-முன்னாடி ஒரு காலத்துல சாச்சா அப்படின்னு ஒரு நாய்க்குட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த நாய்க்குட்டிக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு

அந்த நாய்க்குட்டி, தான் ஒரு பணக்கார வீட்டுல வளர்க்கப்படல, தான் ரொம்ப அசிங்கமா இருக்கோம் ,எனக்கு எதுவுமே கிடைக்க மாட்டேங்குது அப்படின்னு எதையாவது சொல்லி புலம்பிக்கொண்டே இருக்கிறது தான் அதோட வேல

அப்படி இருக்கிறப்பதான் ஒரு நாள் அந்த நாய்க்குட்டி பட்டணத்துக்கு போச்சு அங்க ஒரு பெரிய இடத்துல நாய்களுக்கான அழகு போட்டி நடந்துச்சு ஊர் முழுசா அந்த விஷயம் போஸ்டர் ஒட்டி வச்சிருந்தாங்க அதை பார்த்துக்கிட்டே பொறாமையில இருந்த சாச்சா நாய்க்குட்டிய யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சு

திரும்பிப் பார்த்த சாச்சா நாய் குட்டி அங்க அது மாதிரியே ஒரு பெரிய நாய் நின்னுகிட்டு இருக்கிறத பார்த்துச்சு , அப்பத்தான் அந்த பெரிய நாய் கேட்டுச்சு எதுக்குப்பா இந்த போஸ்டர இவ்வளவு நேரம் பார்த்துகிட்டு இருக்க நீயும் அழகாத்தான் இருக்க நீயும் போய் இந்த அழகு போட்டியில கலந்துக்க அப்படின்னு சொல்லுச்சு

அதுக்கு அந்த குட்டி நாய் சொல்லுச்சு அட போங்கங்க நானே அழகு குறைச்சலா இருக்கு கடவுள் என்ன அசிங்கமா படைச்சிட்டார்ன்ற வருத்தத்துல இருக்கேன் நீங்க என்ன என்னமோ செய்ய சொல்றீங்க அப்படின்னு சொல்லுச்சு உடனே அந்த பெரிய நாய்க்கு புரிஞ்சு போச்சு இந்த குட்டி நாய்க்கு தாழ்வு மனப்பான்மை இருக்கு அப்படிங்கற விஷயம்

அப்பத்தான் அந்தப் பெரிய நாய் சொல்லுச்சு உன்னோட விதி அது மட்டும் தான்னு ஏன நினைக்கிற விதியை மதியால் வெல்லலாம் அப்படின்னு ஆறுதல் சொல்ல ஆரம்பிச்சிருச்சு, இப்பதான் குட்டி நாய் இடைமறித்துச் சொல்லுச்சு விதியை வேணும்னா எப்படி வேணாலும் மாத்தலாம் ஆனா ஒருத்தரோட அழகை எப்படி கூட்ட முடியும் உங்களால முடிஞ்சா என்ன இந்த போட்டியில் ஜெயிக்க வச்சு காட்டுங்க பார்ப்போம் அப்படின்னு சொல்லுச்சு

நான் இது மாதிரி வேலைஎல்லாம் செய்யறது இல்ல ஆனா நீ ரொம்ப குட்டியா இருக்க உனக்கு மிகப்பெரிய நல்ல வாழ்க்கை இருக்கு உன்னை இப்படியே விட்டுட்டன்னா நீ இதே மாதிரி அடுத்தவங்க மேல பொறாமைப்பட்டு உன்னை நீயே தாழ்த்திக்கிட்டு உன் வாழ்க்கையை தொடருவ அதனாலவே உனக்கு நான் இன்னைக்கு உதவி செய்யுறேன்னு சொல்லுச்சு

உடனே ரெண்டு நாய்களும் போயி மறுநாள் நடக்க இருக்கிற நாய்களுக்கான அழகு போட்டியில குட்டி நாயோட பெயரைச் சேர்த்தாங்க மறுநாள் போட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்த பெரிய நாய் மேடைக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு உயரமான இடத்தில போய் நின்னு ஒளிஞ்சு கிடுச்சு ,அது அங்க இருக்குறத யாரும் பார்க்காத படி மறைவாவே இருந்துச்சு அந்த நாய் குட்டி

போட்டிக்கு வந்த நாய் குட்டிகள் நிறைய அழகழகா வரிசையா மேடைக்கு வர ஆரம்பிச்சுச்சு அப்ப அவங்களுக்கு மேல ஒளிஞ்சிகிட்டு இருந்த பெரிய நாய் சில மிளகாய் பொடிகளையும் துர்நாற்றம் வீசுற திரவியங்களையும் போட்டிக்கு போற அழகான நாய்கள் மேல போட்டுச்சு

அதனால மேடைக்கு போனதும் அந்த நாய்களுக்கு உடம்புல அரிப்பு எடுத்துச்சு அதுனால அஷ்ட கோணலா நின்னுச்சிங்க இதை பார்த்தே அழகான நாய்க்குட்டிய தேர்வு செய்ய முன்னாடி உட்கார்ந்து இருந்தவங்க அவங்களை எல்லாம் தோத்தவங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க,அந்த அழகான நாய்ங்க கிட்ட கூட போக முடியாத அழகுக்கு துர்நாற்றம் வீச ஆரம்பிச்சதும் அதுங்கள எல்லாம் வேகமா மேடையில இருந்து இறக்கி விட்டுட்டாங்க

கடைசியா நம்ம சாச்சா நாய்க்குட்டி மேடைக்கு வந்துச்சு,அது வந்ததும் அடடா முதல் தடவையா ஒரு நாய் நல்லா நின்னு போஸ் கொடுக்குதுனு ,எல்லாரும் கை தட்ட ஆரம்பிச்சாங்க , உடனே சாச்சா நாய்க்கு அப்பத்தான் தன்னம்பிக்கையே பிறக்க ஆரம்பிச்சுச்சு ,உடனே நேர்த்தியான ஒரு நடை நடந்து அங்க இருக்குறவங்க முன்னாடி அழகா தெரிஞ்சுச்சு , வேற வழியே இல்லாம அன்னைக்கு போட்டியில சாச்சா நாய் குட்டி தான் அழகான நாய்க்குட்டின்னு பரிசு கொடுத்தாங்க இதை வாங்கின சாச்சா நாய் குட்டிக்கு அதிர்ச்சியா இருந்துச்சு

இது எல்லாம் எப்படி நடந்துச்சு அப்படின்னு பெரியநாய்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சாச்சா குட்டி நாய் அன்னையிலிருந்து அந்த பெரிய நாய்க்குட்டிய தன்னோட வாத்தியாரா ஏத்துக்கிட்டு நல்ல பல விஷயங்களை அதுகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டு தன்னோட வாழ்க்கையை சுமூகமா வாழ ஆரம்பிச்சுச்சு சாச்சா நாய் குட்டி

இந்த உலகத்துல நமக்கு கீழ இருக்குறவங்கள எப்படி தாழ்வா நினைச்சு அவுங்கள ஒதுக்க கூடாதோ ,அதே மாதிரி நமக்கு மேல இருக்கவங்க மேல ரொம்ப பொறாம படவும் கூடாது
